பள்ளிக் கட்டடங்கள் உடைப்பு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகளை இடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி வருவதை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகக் கட்டடங்களின்தரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
சோதனை என்ற பெயரில் அவற்றை இடித்தும் பெயர்த்து எடுத்தும் வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.
மாணவர்கள் பள்ளியில் உட்கார்ந்திருக்கும்போதே திடீரென்று சென்று, "சோதனை நடத்துகிறோம்" என்று கூறிக்கொண்டு கதவுகளையும் ஜன்னல்களையும் அவர்கள் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் இந்தச் செயல்களை திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டித்துள்ள நிலையில்,பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில்,
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் நவீனதொழில்நுட்ப முறைகள் மூலம் கட்டப்பட்டவையாகும்.
பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரின் மேற்பார்வையில்தான் அந்தப் பள்ளிக்கட்டடங்கள் கட்டப்பட்டன. எனவே அவற்றில் தவறு நடப்பதற்கா வாய்ப்புக்களே இல்லை.
மாநகராட்சிப் பள்ளிக் கட்டடங்கள் அனைத்தும் பலம் வாய்ந்த இயந்திரங்கள் மூலம் நன்றாகவே கட்டப்பட்டன.
அப்படி இருந்தும் பள்ளிக் கட்டடங்களை உடைத்துப் பார்த்துச் சோதிக்கச் சொல்லி தமிழக அரசு வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
உடைக்கப்பட்ட கட்டடங்களை தமிழக அரசு உடனடியாகச் சரி செய்து தர வேண்டும். மேலும் எந்தவிதமானசேதமும் இல்லாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில்கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
வரும் 20ம் தேதிக்கு இம்மனு தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசுத் தரப்புவழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications