"மதமாற்ற தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது"
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று தேசிய சிறுபான்மை ஆணையம்வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் தொடர்பாக தமிழக கிருஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்ஆணைய உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஆணையத்தின் துணைத் தலைவர் தர்லோச்சன் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் தொடர்பாக கிருஸ்தவசமூகத்தினரின் குறைகள் கேட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆளுநிர் ராம் மோகன் ராவையும் சந்தித்துபேசவுள்ளோம்.
இந்த சட்டம் குறித்து தனிப்பட்ட முறையில் நாங்கள் கருத்துக் கூற முடியாது. மாநில அரசால் சட்டசபையில்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. அவ்வளவுதான் இதுகுறித்து நாங்கள் கூற முடியும்.
மேலும் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள், பார்சிகள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் என ஐந்து மதசிறுபான்மையினர் உள்ளனர். இவர்களுக்கும், பெரும்பான்மை சமூகத்தினருக்கும் இடையே நல்லுறவும்,ஒத்துழைப்பும் நிலவ வேண்டும்
"இந்துத்துவா" என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை பாரதீய ஜனதாக் கட்சி விளக்க வேண்டும்.இதுதொடர்பாக பகிரங்க விவாதம் நடத்த வேண்டும் என்று அது கூறியிருப்பதை வரவேற்கிறோம்.
"இந்துத்துவா" என்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் அளிக்கின்றனர். இதனால் குழப்பமே மிஞ்சுகிறது.இதற்கு ஒரு இறுதியான, தெளிவான, உண்மையான விளக்கம் ஏற்பட வேண்டும் என்றார் சிங்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications