"கோவை சிறையில் மனித உரிமை மீறப்படவில்லை"
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளிடம் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகஎழுந்த குற்றச்சாட்டுக்களை அந்தச் சிறையின் உயர் அதிகாரிகள் மறுத்தனர்.
கோயம்புத்தூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளமக்கள் குடியரசுக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சுபைதா சமீபத்தில் சிறைக்கு வந்தபோதுசெல்போன்களுடன் சிக்கினார்.
ஆனால் சிறைக் காவலர்கள் தன்னையும் தன் மகனையும் பிடித்துக் கீழே தள்ளிவிட்டதாக சுபைதா புகார்கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்துதான் கோயம்புத்தூர் சிறையில் மனித உரிமை மீறல்கள் நடந்து விட்டதாக மதானி உள்ளிட்டசில தீவிரவாதிகள் குற்றம் சாட்டத் தொடங்கினர். மேலும் இதைக் கண்டித்து சிறைக்குள்ளேயே அடிக்கடி அவர்கள்சத்தம் போட்டு கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கோயம்புத்தூர் சிறையில் விசாரணை நடத்திய சிறைத் துறை டி.ஐ.ஜியான பி.எம்.எஸ்ரா கூறுகையில்,
சிறைக் குறிப்புப் புத்தகத்தில் உள்ள விதிமுறைகள் படியே கைதிகளிடம் விசாரணைகள் நடைபெற்றுள்ளன. இதில்எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் நடைபெற்றிருக்கவில்லை.
மேலும் மத்திய ரிசர்வ் போலீசார் கோயம்புத்தூர் சிறையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும்கூடுதல் சிறை வார்டன்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கைதிகளின் பிரச்சனை இன்றி சிறை மிகவும் அமைதியாகவும், சிறைக் காவலர்களின் முழுக்கட்டுப்பாட்டிலும் உள்ளது என்றார் எஸ்ரா.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications