சென்னையில் சிங்கப்பூர் அதிபர் நாதன்
சென்னை:
சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர். நாதன் 3 நாள் பயணமாக இன்று மாலை சென்னை வருகிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சிங்கப்பூர் அதிபர் நாதன், தன் பயணத்தின் கடைசிக் கட்டமாக தன்னுடைய பூர்வீகமான தமிழகத்திற்கு வருகிறார்.
இன்று மாலை ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து நேரடியாக பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்கு அவர் செல்கிறார். அங்கு ஓய்வெடுத்த பின்னர் ராஜ் பவன் சென்று ஆளுநர் ராமமோகன் ராவைச் சந்திக்கிறார். அங்கு நாதனுக்கு ஆளுநர் இரவு விருந்து அளிக்கிறார். பிறகு மீண்டும் ஹோட்டலுக்கு திரும்புகிறார் நாதன்.
பின்னர் நாளை காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் கலாஷேத்திராவுக்கு நாதன் செல்கிறார். அங்கு சுற்றிப் பார்த்த பின் பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய குடிசைத் தொழில் எம்போரியத்திற்கு செல்கிறார்.
அதன் பின்னர் கிண்டியில் உள்ள ஐ.ஐ.டிக்கு செல்கிறார். நாளை மாலை சென்னையில் உள்ள சிங்கப்பூர் குடிமக்களைச் சந்திக்கிறார்.
நாளை மறுநாள் காலை தென் மாநிலங்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கிராமமான தக்ஷின சித்ராவுக்கு சென்று பார்வையிடுகிறார். அன்று மாலை நிருபர்களைச் சந்தித்த பின் இரவு விமானத்தில் சிங்கப்பூர் செல்கிறார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications