விடுதலைப் புலிகளின் கூட்டங்கள்: சு.சுவாமியின் மனு தள்ளுபடி
விடுதலைப்புலிகள் பங்கேற்கும் எந்தக் கூட்டத்திலும் இந்திய அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாதுஎன்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் தற்போது நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக,நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த நவம்பர் 25ம் தேதி நிதி திரட்டும் மாநாடு ஒன்று நடைபெற்றது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த மாநாட்டின் மூலம்சர்வதேச நாடுகளிலிருந்து நிதி திரட்டப்பட்டது.
நார்வே அரசு ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் இலங்கை, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்டநாடுகள் கலந்து கொண்டு நிதியுதவிகளை அறிவித்தன. இம்மாநாட்டில் புலிகளும் கலந்து கொண்டனர்.
புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த மாநாட்டில் மத்திய அரசு அதிகாரிகள் யாரும்கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் சுவாமி பொது நல மனு ஒன்றைக் தாக்கல்செய்திருந்தார்.
இம்மாநாட்டில் மட்டுமல்லாமல் புலிகள் பங்கேற்கும் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் கூட்டங்களில்இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அம்மனுவில் சுவாமிகோரியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக மத்திய அரசு அளித்த பதிலில், நார்வேயில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுவாமியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications