இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த இளங்கோவன் முயற்சி: பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் முயற்சி செய்கிறார் என்றுபாரதீய ஜனதாக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அதிமுகவை மிகத் தீவிரமாக ஆதரித்து வரும் பா.ஜ.க. எம்.எல்.ஏவான ராஜாவுக்கு சமீபகாலமாக அக் கட்சியில்மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுகவை மிக மட்டமாக விமர்ச்சித்து வரும் ராஜா இப்போதுஇளங்கோவனை நோக்கிப் பாய்ந்துள்ளார்.

காஞ்சி சங்கர மடத்திலும் தலித் மாணவர்கள் ஒதுக்கப்பட்டு, ஜாதிரீதியில் சிறுமைப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிஅதைக் கண்டித்து ஜனவரி 26ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதற்கு கட்சியின் சட்டசபை துணைத் தலைவராக உள்ளராஜா மூலமாக பாரதீய ஜனதாக் கட்சி கண்டனம்தெரிவித்துள்ளது.

ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் சங்கர மடத்திற்கு எதிராக இளங்கோவன் தீர்மானம் கொண்டுவந்தார். இதை அவரது கட்சித் தலைவர் சோ.பா. ஆதரிக்கவில்லை.

இந்த தீர்மானத்தின் மூலம் இந்துக்களிடையே பெரும் மதிப்பு பெற்றுள்ள காஞ்சி மடத்தைஅவமானப்படுத்தியுள்ளார் இளங்கோவன். காஞ்சி மடத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாகஇளங்கோவன் அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சியின் போலி மதவாதத்துக்கு உதாரணமாகும்.

சர்ச்சுகளில் தலித் கிறிஸ்தவர்கள் பாகுபாடு பார்க்கப்படுவதை ஏன் இவர் கண்டிக்க மறுக்கிறார்?

தலித்களை, இந்து மதத்திலிருந்து பிரித்து அதன் மூலம் ஓட்டு வங்கியை உருவாக்கவே இளங்கோவன்போன்றவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ராஜா.

திமுகவுடன் கூட்டணி இல்லை:

இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லை என பா.ஜ.க. திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

அக் கட்சியின் தேசியச் செயலாளரான லலிதா குமாரமங்கலம் பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார். மறைந்த பா.ஜ.க.தலைவர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி தான் லலிதா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+