சித்தி கொடுமை: சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு ஓடிய சிறுவன்
நாகர்கோவில்:
சித்தி கொடுமை தாங்க முடியாமல் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு தப்பி ஓடிய சிறுவனை போலீஸார்மீட்டனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது முதல் மனைவியின் மகன் கிருஷ்ணகுமார்(வயது 8). முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வது திருமணம் செய்து காண்டார் ராமச்சந்திரன். ஆனால்இரண்டாவது மனைவி, கிருஷ்ணகுமாரை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனால் வேதனை அடைந்த சிறுவன் மனம் வெறுத்து வீட்டை விட்டு வெளியேறினான். கன்னியாகுமரி செல்லும்எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினான். ரயில் நாகர்கோவில்வந்ததும் அங்கு இறங்கினான்.
பிளாட்பாரத்தில் கண்ணீருடன் தவித்துக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு போலீஸார்அவனை மீட்டு விசாரித்தனர். அப்போது வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுவன் விவரித்தான்.
இதையடுத்து அவனைப் பத்திரமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள ரயில்வே போலீசார் சென்னைபோலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications