கலெக்டரை சிறை பிடித்த கிராம மக்கள்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள வளையப்பட்டி கிராமத்தில், குடிநீர் வசதி கோரி மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை அதிகாரிகளை ஊர்மக்கள் 3 மணி நேரம் சிறை வைத்தனர்.
வளையப்பட்டி கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்குமார், அதிகாரிகள், காவல்துறைஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு திரண்ட ஊர் மக்கள், தங்களது கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரி முற்றுகைப்போராட்டம் நடத்தினர். பின்னர் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை வெளியே செல்லவிட மாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டரை உடனே விடுவிக்குமாறு போலீசார் உள்ளே நுழைந்து பொது மக்களை மிரட்டினர். இதையடுத்து அவர்களையும் பொது மக்கள்சூழ்ந்து கொண்டு கெரோ செய்தனர். இதனால் அவர்களும் வெளியேற முடியாத சூழ்நிலை உருவானது.
ஆனால், பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதாகவும், அங்கு குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்வதாகவும் கலெக்டர் உறுதி அளித்தார்.
இதன் பிறகே தங்களது போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர். சுமார் 3 மணி நேர முற்றுகைக்குப் பிறகே கலெக்டர் செந்தில் குமார்அங்கிருந்து வெளியேற முடிந்தது.
-->












Click it and Unblock the Notifications