டெண்டர் விவகாரத்தில் ஆள் கடத்திய கோ.சி.மணியின் மகன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தஞ்சையில் நடந்த கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்குத் தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணியின்மகன் அன்பழகன் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2000-மாவது ஆண்டு 30ம் தேதி கும்பகோணம்-வேதாரண்யம் குடிநீர்த் திட்டத்திற்கு குழாய் பதிப்பதுதொடர்பான பணிகளுக்கான டெண்டர் எடுக்க மும்பையைச் சேர்ந்த கேமன் நிறுவனம் எடுக்க முடிவு செய்தது.

இதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் தஞ்சாவூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமைப்பொறியாளர் அலுவகத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அன்பழகன் மற்றும் அவரது நண்பர்கள், கார்களில் சென்று கொண்டிருந்த மும்பை பொறியாளர்களைமடக்கினர்.

பின்னர் காரில் இருந்த கேமன் இந்தியா நிறுவனத்தின் திட்டப் பொறியாளர்கள் விவேக் ரய், ஜோசப் மற்றும் ராமன்ஆகியோரை கடத்திச்சென்றனர்.

பின்னர் டெண்டரை விண்ணப்பிப்பதற்கான நேரம் முடிந்த பிறகுதான் அவர்களை விடுவித்தனர்.

தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடத்தலில் அவர்கள்ஈடுபட்டனர்.

விடுவிக்கப்பட்ட பொறியாளர்கள் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தஞ்சாவூர் டி.எஸ்.பி. இந்தவழக்கை விசாரித்து வந்தார். ஆனால் பின்னர் இந்த வழக்கு கைவிடப்பட்டது.

இந் நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு, வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. கடத்தல், சட்ட விரோதமாக கூடுதல், மிரட்டுதல், சட்டவிரோத ஆயுதங்களை எடுத்துச் செல்லுதல்ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது அன்பழகனும், அவரது நண்பர் பாலாஜியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாகிவிட்ட முபாரக், மணிமாறன், நரசிம்மன் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+