ஐ.சி.சி. ஒப்பந்தத்தில் இந்திய வீரர்கள் கையெழுத்து

Subscribe to Oneindia Tamil

ஆக்லாந்து & மும்பை:

விளம்பர விவகாரம் தொடர்பாக ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று அறிவித்தனர். இது தொடர்பானகாண்ட்ராக்டிலும் அவர்கள் கையெழுத்திட்டனர்.

உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களும் இன்று கையெழுத்திட்டனர்.

உலகப் கோப்பை போட்டியில் ஐ.சி.சியின் விளம்பரங்களின் மட்டுமே வீரர்கள் நடிக்க வேண்டும், ஐ.சி.சியின் விளம்பரச் சின்னம் கொண்டஸ்டிக்கர்களைத் தான் இந்திய வீரர்கள் உடைகளில் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தனியார் விளம்பரம் மூலம் கோடிக்கணக்கில் பணம் பார்த்து வரும் நம் வீரர்கள் இதில் கையெழுத்திட மறுத்தனர். இந்த விஷயத்தில்வீரர்களுக்கு ஆதரவாக விளம்பரக் கமிட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் டால்மியாவும் விலகினார்.

இந் நிலையில் அடுத்த மாதம் 8ம் தேதி உலகக் கோப்பை போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கவுள்ளன. இதனால் ஐ.சி.சியில்ஒப்பந்தத்தில் கையெழுத்திட காலக்கெடு நெருங்கிக் கொண்டே வந்தது. 15ம் தேதிக்குள் கையெழுத்துப் போட்டே ஆக வேண்டும் எனகெடு விதிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் உலகப் கோப்பைப் போட்டியில் இந்தியாவை விளையாட விட மாட்டோம் என்று கூடஎச்சரிக்கைகள் வந்தன.

இதையடுத்து இன்று உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள சவுரவ் கங்கூலி தலைமையிலான அணிவீரர்கள் 15 பேரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஆனாலும் அதில் உள்ள சில சர்ச்சைக்குறிய பிரிவுகளை எதிர்ப்பதாகவும் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகக் கோப்பைப் போட்டி நடக்கும் காலத்தில் ஐ.சி.சிக்குப் போட்டியாக தாங்கள் நடித்த விளம்பரங்களை தொலைக்காட்சிகளில்ஒளிபரப்ப வேண்டாம் என வீரர்கள் அந்தந்த நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் தெரிகிறது.

ஆனால், போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னும் போட்டி முடிந்த பின்னர் ஒரு மாதமும் விளம்பரங்களை ஒளிபரப்பலாம் எனஇந்திய வீரர்கள் கூறியுள்ளனர். இது ஐ.சி.சி. சொல்லும் விதிகளுக்கு முரணானதாகும்.

இப்போது நியூசிலாந்தில் உள்ள வீரர்கள் இந்த ஒப்பந்த்தில் கையெழுத்திட்டு அதை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைமையகத்துக்குஅனுப்பிவிட்டனர். அது பின்னர் ஐ.சி.சியிடம் ஒப்படைக்கடும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+