பேரம் படியாததால் லாட்டரிக்கு தடை: இளங்கோவன் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லாட்டரிச் சீட்டு முதலாளிகளிடம் கேட்ட லஞ்சப் பணம் கிடைக்காத காரணத்தால்தான் அதன் விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

லாட்டரிச் சீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரவேற்கக்கூடியதே. இருப்பினும் இது நிரந்தரமாக அமல்படுத்தப்படவேண்டும்.

உண்மையில், லாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்யும் முதலாளிகளுக்கும், அரசுத் தரப்பில் சிலருக்கும் இடையேபேரம் படியவில்லை.

அரசு தரப்பினர் கேட்ட லஞ்சப் பணத்தை இவர்கள் கொடுக்க முன்வரவில்லை. இதன் காரணாகவே லாட்டரிச் சீட்டுவிற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக போட்டியிடும். இதில் மாற்றம் இல்லை.கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு வழங்குவதன் மூலம் அவர்களுக்குஓரளவுதான் நிவாரணம் கிடைத்தது போல் ஆகிவிடும்.

எனவே இந்தத் திட்டத்திற்குப் பதிலாக விவசாயிகளுக்கு ஒரு மூட்டை அரிசி வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும். இதற்காக 4 லட்சம் டன் அரிசி மூட்டைகளை தனியாக ஒதுக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.

மற்ற மாநில விவசாயிகளுக்கு அரிசி மூட்டைகளை ஒதுக்க முன் வரும் மத்திய அரசு தமிழகத்துக்கு மட்டும்அவற்றை வழங்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார் இளங்கோவன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+