தலித்களை அவமதித்த வழக்கு: சங்கராச்சாரியாருக்கு கோர்ட் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தலித்களை அவமானப்படுத்திப் பேசியதாக காஞ்சி சங்கராச்சாரியார் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும், மாநில போலீஸ்டிஜிபிக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த வக்கீல் சத்தியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

தனது மனுவில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்துள்ள ஒரு பேட்டியில், கல்வி, மதம் போன்றவிஷயங்களில் கிறிஸ்தவர்களாக இருக்கும் கிறிஸ்தவ தலித்கள், வேலை வாய்ப்பு என்று வரும்போது இந்துக்களாக மாறி தங்களதுஉரிமைகள், சலுகைகளை கேட்கிறார்கள். இவர்கள் தலித்கள் தானா? என்று கூறியுள்ளார்.

மேலும் தலித் மக்களை கேவலப்படுத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் பல்வேறு விஷயங்களைக் கூறியுள்ளார் என்று மனுவில்குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், இதுதொடர்பாக ஜனவரி 24ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு காஞ்சி சங்கராச்சாரியார்மற்றும் போலீஸ் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+