பெரு விமானத்தைக் காணவில்லை: விபத்துக்குள்ளானதா?
லிமா (பெரு):
கடந்த இரு நாட்களாக அமெரிக்காவிலும், துருக்கியிலும் நடந்த விமான விபத்துக்களைத் தொடர்ந்து பெரு நாட்டிலும் ஒரு விமானம்விபத்துக்குள்ளாகியிருப்பதாகத் தெரிகிறது.
மிக அடர்த்தியான இந்தக் காட்டுப் பகுதியில் கடும் மழையும் பெய்து வருவதால் தேடுதல் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைநிலவுகிறது.
டி.ஏ.என்.எஸ். என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் (TANS Airline flight 222) நேற்று பெரு தலைநகர் லிமாவில் இருந்துசெக்லயோ என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்தது. ஆனால், அமேசான் காட்டுப் பகுதியின் மீது பறந்து கொண்டிருந்போது அந்தவிமானம் ரேடாரில் இருந்து மறைந்தது. தரைக்கட்டுப்பாட்டின் தொடர்பையும் இழந்தது.
அதில் 8 குழந்தைகள் உள்பட 42 பயணிகள் இருந்தனர். உலகின் மிக அடர்த்தியான அந்தக் காட்டுப் பகுதியில் மழைப் பொழிவும் மிகக்கடுமையாக இருக்கும்.
கடும் மழை காரணமாக விமானம் எங்காவது தரையிறங்கியிருக்கலாம் என பெரு விமானத்துறை கூறினாலும் அதை நம்ப யாரும் தயாராகஇல்லை. விமானம் விபத்துக்குளாகிவிட்டதாகவே நம்பப்படுகிறது.
இதைத் தேடிச் சென்ற ஹெலிகாப்டர்கள் கூட மீண்டும் திரும்பி வந்துவிட்டன. அந்த அளவுக்கு மிகக் கடுமையான மழை பெய்து வருகிறது.
விமானம் காணாமல் போன இடத்தில் இருந்து அருகில் உள்ள கிராமத்தை அடைய ரோடுகள் ஏதும் இல்லை. காட்டுக்குள் 6 மணி நேரம்நடந்தால் தான் இப் பகுதியை அடைய முடியும்.
-->












Click it and Unblock the Notifications