கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. வீட்டில் நள்ளிரவில் புகுந்து போலீசார் அட்டகாசம்: மக்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்:

மன்னார்குடி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவான சிவபுண்ணியத்தின் வீட்டிற்குள் போலீசார் நள்ளிரவில் புகுந்துஅடாவடியாக நடந்து கொண்டதைக் கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

திருவாரூர் மாவட்டம் பாளையக்கோட்டையைச் சேர்ந்த விவசாயியான சண்முகம் கடந்த 6ம் தேதி தற்கொலைசெய்து கொண்டார். இவர் இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்தவர்.

காவிரி நீர் இன்றி சம்பா பயிர்கள் கருகத் தொடங்கியதால் மனமுடைந்து சண்முகம் தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.

இந்தக் கடிதத்தை சிவபுண்ணியம்தான் பத்திரிக்கை நிருபர்களிடம் வெளியிட்டார். மேலும் நேற்று காவிரி டெல்டாவில்நடந்த விவசாயிகள் பந்துக்கு முழு ஆதரவாய் நின்றார். விவசாயிகளுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள சிவபுண்ணியத்தின் வீட்டில் போலீசார்அதிரடியாகப் புகுந்தனர். சோதனை நடத்துகிறோம் என்று கூறிக் கொண்டு வீட்டிலிருந்த மேஜை, நாற்காலிஆகியவற்றை போலீசார் இழுத்துப் போட்டு உருட்டினர்.

போலீசார் போல இல்லாமல் குண்டர்கள் மாதிரி நடந்து கொண்டனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயி சண்முகம் எழுதிய ஒரிஜினல் கடிதத்தைத் தங்களிடம் கொடுத்து விடுமாறுசிவபுண்ணியத்தைப் போலீசார் மிரட்டினர். ஆனால் அவர் அதைக் கொடுக்க மறுத்து விட்டார்.

இதையடுத்து அவரிடம் போலீசார் மிக முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். ஆனால், அவர்களிடம் கடித்தைத்தரவே முடியாது என சிவபுண்ணியம் கூறிவிட்டார்.

நீண்ட நேரம் சிவபுண்ணியத்திடமும் அவரது வீட்டுப் பெண்களிடமும் விசாரணை நடத்திய போலீஸார் அதிகாலையில்தான் திரும்பிச்சென்றனர். வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

சிவபுண்ணியத்தின் வீட்டிற்குள் போலீசார் நள்ளிரவில் புகுந்து அத்துமீறிய சம்பவம் காட்டுத் தீ போல பரவியது.இதையடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று காலை திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடைய சாலை மறியல் போராட்டம் இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் திருவாரூர்மாவட்டம் முழுவதுமே பெரும் பதற்றம் நிலவுகிறது.

பட்டினியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதை வெளி உலகுக்குத் தெரிய வைத்து தங்களது ஆட்சிக்குகெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டதாக அதிமுக அரசு நினைக்கிறது.

இதனால் தான் இதுவரை எந்த ஊழல் புகாரிலும் சிக்காத, உருப்படியாய் உள்ள சில எம்.எல்.ஏக்களிலி ஒருவரானசிவபுண்ணியத்தை போலீசை விட்டு மிரட்டியுள்ளனர்.

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஆயுதமேந்திய போலீசார் அம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும்ஏராளமாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவபுண்ணியத்தின் வீட்டில் போலீசார் நள்ளிரவில் புகுந்து சோதனை நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலப் பொதுச் செயலாளரான நல்லக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பட்டினிச் சாவு குறித்து வெளியில் தெரிவித்தது ஒருகுற்றமா? அதற்காக நள்ளிரவில்போய் வீடு புகுந்து சோதனை என்ற பெயரில்எம்.எல்.ஏ.வை மிரட்டுவதா? பட்டினியால் சாகும் விவசாயிகளைக் காப்பாற்றுவதில் அரசு முனைப்பு காட்ட வேண்டுமே, தவிர எதிர்க்கட்சிஎம்.எல்.ஏக்களை மிரட்டுவதில் ஆர்வம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் நல்லகண்ணு.

காங்., மார்க்சிஸ்ட் கண்டனம்:

இதற்கிடையே சிவபுண்ணியத்தின் வீட்டிற்குள் போலீசார் புகுந்ததை காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆகிய கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் இன்று சென்னையில் நிருபர்களிடம்கூறுகையில்,

தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.

சிவபுண்ணியத்தின் வீட்டில் அத்துமீறிப் புகுந்து போலீசார் சோதனை நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது.திருவாரூர் மாவட்ட எஸ்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றார்.

விவசாயி சண்முகத்தின் தற்கொலையை மூடி மறைப்பதற்காகவே மனித உரிமையை மீறும் இதுபோன்ற செயலில்போலீசார் ஈடுபட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+