புற்று நோய்க்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை: ஈரோட்டில் சாதனை
ஈரோடு:
ஈரோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 2 அரிய வகை புற்று நோயாளிகளுக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
ஈரோட்டில் உள்ள லோட்டஸ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில்தான் இந்த அரிய வகையானஅறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
28 வயதான ஒரு பெண்ணுக்கு சி.டி. ஸ்கேன் செய்து பார்த்ததில் இருதயத்தில் புற்றுநோய்க் கட்டி ஒன்று இருப்பதுதெரிய வந்தது.
இந்த புற்றுநோய்க் கட்டி உலகத்திலேயே வெகு சிலருக்குத்தான் வருமாம். ஆனால் லோட்டஸ் மருத்துவமனைடாக்டர்கள் இந்தப் புற்றுநோய்க் கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
பொதுவாக இதற்கான அறுவைச் சிகிச்சைக்கு நவீன வசதிகளுடன் கூடிய உயர் ரக அறுவைச் சிகிச்சை கருவிகள்தேவைப்படுமாம். ஆனால் அவை எதுவும் இல்லாமலேயே சாதாரண அறுவைச் சிகிச்சை மூலமே அந்தப்புற்றுநோய்க் கட்டியை டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
அதேபோல் ஒரு எட்டு வயது சிறுமிக்கு இருதயத்தின் ஒரு வென்ட்ரிக்கிளில் புற்றுநோய்க் கட்டி வளர்ந்திருந்தது.
இந்தப் புற்றுநோய்க் கட்டியையும் லோட்டஸ் மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
ஆபரேஷன் முடிந்த பின்னர் அந்த இரண்டு புற்றுநோயாளிகளும் தற்போது மிகவும் நலமுடன் இருப்பதாகலோட்டஸ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஈ.கே. சகாதேவன்கூறினார்.
-->












Click it and Unblock the Notifications