அதிமுக உதவியுடன் த.மா.கா.கா. உதயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகவை ஆதரித்து வரும் அதிருப்தி தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேரும் சேர்ந்து தனிக் கட்சியை ஆரம்பித்துள்ளனர். இக்கட்சியின் பெயர் தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ்.

தமிழ் மாநில காங்கிரஸை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க ஜி.கே.வாசன் முடிவு செய்தபோது அதை எதிர்த்து குமாரதாஸ், ஹக்கீம். மணிநாடார் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள் குரல் கொடுத்தனர். இவர்களுக்குப் பின்னணியில் அதிமுக இருந்தது. இதனால் அவர்களையும் மீறிகட்சியை இணைத்தார் வாசன்.

இதையடுத்து இந்த 5 பேரும் தனித் தனியே இயங்கி வந்தனர். ஒருவருடன் ஒருவர் சேரவில்லை. இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்என காங்கிரஸ் கட்சி சபாநாயகர் காளிமுத்துவிடம் கோரி வந்தது. ஆனால், இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தனது தலைமையில் இந்த 4 பேரையும் ஒன்றிணைத்து போட்டி கட்சி நடத்த குமாரதாஸ் முயன்று வந்தார். இதற்காக ஜெயலலிதாவிடம்அவர் பெட்டி வாங்கிவிட்டதாகக் கூட குற்றம் சாட்டப்பட்டது.

இந் நிலையில் தான் மணி நாடார் இறந்தார். இவர் பதவி வகித்த சாத்தான்குளம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது. மறைந்த மணிநாடாரின் மனைவி ஜானகியை அதிமுகவில் இணைத்தார் ஜெயலலிதா.

இதற்கிடையே குமாரதாஸ் தலைமையில் அதிருப்தியாளர்கள் 4 பேரும் இணைந்து தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் என்ற கட்சியைஉருவாக்கியுள்ளனர். இக் கட்சியை தேர்தல் கமிஷனிடமும் பதிவு செய்துள்ளனர். இந்தப் பணிகளுக்கு அதிமுக பெருமளவில் உதவியதாகக்கூறப்படுகிறது.

இந்த புதிய கட்சியின் தலைவராக குமாரதாஸ் இருப்பார். சட்டசபைக் கட்சித் தலைவராகவும் அவரே இருப்பார்.

இன்று நிருபர்களிடம் இதனைத் தெரிவித்த குமாரதாஸ் கூறியதாவது:

நாங்கள் 4 பேரும் தனிக் கட்சியாக செயல்படுவோம். எங்களுக்கு சட்டசபையில் தனி இருக்கைகள் ஒதுக்கக் கோரி சபாநாயகர்காளிமுத்துவிடம் கடிதம் கொடுத்துள்ளோம். எங்கள் கட்சியைச் சேர்ந்த மணி நாடார் இறந்ததால் தான் சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல்நடக்கிறது.

எனவே, அந்தத் தொருதியை எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு தந்து ஆதரிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைக்கேட்டுக் கொள்கிறோம்.

காவிரி டெல்டாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச உணவு தரும் தமிழக அரசின் திட்டம் மிகவும் பாராட்டத்தக்கது என்றார்குமாரதாஸ்.

சாத்தான்குளத்தில் மணி நாடாரின் மனைவி ஜானகியை அதிமுக சார்பில் நிறுத்தி குமாரதாஸ் உள்ளிட்ட அதிருப்தி காங்கிரஸ்காரர்களைபிரச்சாரத்தில் இறக்கி விடுவார் ஜெயலலிதா என்று தெரிகிறது.

சாத்தான்குளத்தில் காங்கிரஸ் வாக்குகள் அதிகம். இதை உடைக்கவே இந்த நேரத்தில் குமாரதாஸ் தலைமையில் போட்டி காங்கிரஸைஆரம்பிக்க வைத்துள்ளது அதிமுக.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+