மின் கோபுரத்தைத் தகர்த்த மேலும் 2 நக்சலைட்டுகள் கைது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே கடந்த நவம்பர் 19ம் தேதி மின் பகிர்மான கோபுரத்தை குண்டு வைத்துதகர்த்த வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து, காவிரி மீட்புப் படை என்ற அமைப்பைச்சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குச் செல்லும் மின்சார வயர்களைத் தாங்கிய மின்கோபுரத்தை குண்டு வைத்துத்தகர்த்தனர். இதில் கோபுரத்தின் நான்கு தூண்களும் சேதமடைந்தன.
சமீபத்தில் நாகப்பா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 3 பேருக்கும் இந்த மின் கோபுர தகர்ப்பில்தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த மூன்று பேரும் தந்த தகவலை வைத்து இப்போது மணிவண்ணன், அருள்ஆகிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிவண்னன் உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள ஜெயம்கொண்டத்தைச் சேர்ந்தவர். அருள், கள்ளநத்தம் என்றஇடத்தைச் சேர்ந்தவர்.
இருவரும் இளவரசன் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த நக்சலைட் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என போலீசார் கூறுகின்றனர்.
இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஜெலட்டின் குச்சிகள், 12 டெட்டனேட்டர்கள், செல்போன்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நக்சலைட் நினைவு தினம்:
இதற்கிடையே தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட் நக்சலைட் ரவீந்திரனின் நினைவு நாளை அனுசரிக்கநக்சலைட்டுகள் தயாராகி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2000மாவது ஆண்டு மாரண்டஹள்ளியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட் ரவீந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்துஅவரது நினைவாக பெண்ணாகரம் பகுதியில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications