பவானி ஆற்றை தமிழகத்திலேயே தடுக்கத் திட்டம்: கேரளாவுக்கு மூக்குடைப்பு
ஈரோடு:
தமிழகத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கேரளாவுக்குள் பாய்வதற்கு முன்பே அதன் நீரோட்டத்தைதமிழகத்திற்குள்ளேயே திருப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக தமிழகத்திலேயேஇந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தான் பவானி ஆறு உருவாகிறது. இந்த மாவட்டத்தின் மலைத் தொடர்களில்உள்ள புலிமலை ஆறு, நாடுகாணி ஆறு மற்றும் மடிப்பு மலை ஆறு ஆகிய மூன்று சிற்றாறுகளும் சேர்ந்துதான்கிங்குருண்டி என்ற பகுதியில் பவானி ஆறாக மாறுகின்றன.
அதன் பின்னர் தமிழகத்திற்குள்ளேயே சுமார் 100 கி.மீ. வரை பயணம் செய்யும் பவானி ஆறு அதன் பின்னர்தான்கேரளாவுக்குள் நுழைகிறது.
கேரள எல்லையில் உள்ள பக்தவத்சலம் என்ற ஆறு பவானியுடன் இணைகிறது. பின்னர் கேரளாவில் சிறிதுதூரத்க்ை கடந்துவிட்டு மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது பவானி ஆறு.
ஆனால், சிறிது தூரம் தனது எல்லைக்குள் வரும் இந்த ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி தமிழகத்துக்கு வரும்நீரைத் தடுக்க கேரளம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலடியாக பவானி கேரளாவுக்குள் நுழையும் முன்பே அதன்குறுக்கே அணையைக் கட்டி நீரை தமிழகத்துக்கே திருப்பிவிடும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
கேரளாவில் உள்ள முக்காலி என்ற இடத்தில் அணையைக் கட்ட அம்மாநில அரசு முழு வீச்சில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பவானியைத் தவிர வேறு சில சிற்றாறுகளும் தமிழக எல்லையில் உற்பத்தியாகி கேரளாவுக்குள்பாய்கின்றன. இவை அனைத்தையும் திருப்பிவிட்டு முக்காலியில் ஒரே அணையாகக் கட்டி நீர் தமிழழகத்துச்செல்வதைத் தடுக்க கேரளா முயன்று வருகிறது.
தமிழகத்தின் கிங்குருண்டி என்ற பகுதியில் ஒரு அணையைக் கட்டினால் பவானி உள்ளிட்ட ஆறுகள்கேரளாவுக்குள் பாய்வதைத் தடுக்க முடியும். இதற்கான வாய்ப்புக்கள் குறித்து தமிழக உளவுத் துறையினரும்நீர்பாசனத்துறை அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியைப் பற்றிய பல விவரங்களையும், அப் பகுதியில் மக்கள் தொகை, சமூக நிலை குறித்தும்விவரங்களை அரசிடம் ஒப்படைத்திருக்கிறது உளவுத் துறையினர். இதையடுத்து கிங்குருண்டியில் அணைகட்டுவது சாத்தியம்தானா என்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே கிங்குருண்டி பகுதியில் ஒரு அணை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டன.ஆனால் காவிரி விவகாரம் போல் இதுவும் பெரிய பிரச்சனையாகி விடும் என்பதாலேயே அந்தப் பணிகளைதமிழக அரசு நிறுத்தி விட்டது.
அரைகுறையாகவே செய்யப்பட்டு அனைத்தும் சிதைந்த நிலையில் உள்ளன. கேரளாவுக்குள் பாயும் பவானி ஆற்றுநீரை அளப்பதற்காக ஒரு அளவு கோலும் அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்தது. அதுவும் தற்போது சிதைந்துபோயுள்ளதால் கேரளாவுக்குள் எவ்வளவு நீர் பாய்கிறது என்பதே தெரியவில்லை.
தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கேரளம் அணையைக் கட்டினால் தமிழகமும் அணையைக் கட்டும் என்றுதெரிகிறது.
கிங்குருண்டி பகுதியில் தமிழக அரசு அணையைக் கட்டினால் கேரளாவுக்குச் செல்லும் சுமார் 70 சதவீத நீரைத்தடுத்துவிட முடியும்.
தமிழகத்தின் இந்தத் திட்டம் குறித்து தெரிந்து கொண்ட கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி இது குறித்து தமிழகமுதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தத் தயார் என்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பவானியின் குறுக்கே அணை கட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் அந்தோணிக்குஜெயலலிதா பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துக் கட்சி உண்ணாவிரதம்:
இதற்கிடையே பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில்ஈரோட்டில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications