கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Subscribe to Oneindia Tamil

ஆக்லாந்து (நியூஸிலாந்து):

நியூஸிலாந்துக்கு எதிரான 6வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று அபார வெற்றி பெற்றது.

அடுத்த மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம்மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில்களமிறங்கியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை எடுத்தது நியூஸிலாந்து.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே நிதானமாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களானகேப்டன் சவுரவ் கங்குலியும், வீரேந்திர சேவாக்கும் பொறுமையாக 70 ரன்களைச் சேர்த்தனர்.

அப்போது 23 ரன்களை எடுத்திருந்த கங்குலி அவுட் ஆனார். பின்னர் ராகுல் திராவிடுடன் ஜோடி சேர்ந்த சேவாக்மளமளவென இந்திய அணியின் ஸ்கோரையும் தன்னுடைய ஸ்கோரையும் உயர்த்திக் கொண்டே போனார்.

திராவிடும் ஓரிரண்டு ரன்களாகச் சேர்த்து சேவாக் செஞ்சுரி அடிக்க உதவினார். பின்னர் 25 ரன்களில் திராவிட்ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வேறு யாருமே உருப்படியாக ஆடவில்லை. ஒற்றை இலக்கத்திலேயே அவுட் ஆகிவெகு வேகமாக பெவிலியன் நோக்கித் திரும்ப ஆரம்பித்தனர்.

சேவாக்கும் 112 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனார். கடைசியில் ஒரு விக்கெட் மற்றும் இரண்டு பந்துகள்மட்டுமே எஞ்சிய நிலையில் ஆட்டம் பரபரப்பானது.

கடைசியாகக் களமிறங்கிய ஆஷிஸ் நெஹ்ரா ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார்.சேவாக்கின் செஞ்சுரியும் வீணாகிப் போய்விடாமல் காப்பாற்றினார். இந்தியா 9 விக்கெட்டுக்களை இழந்து 203ரன்களை எடுத்தது.

இதையடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆறாவது ஒருநாள் போட்டியை இந்தியா வென்றது.

இருந்தாலும் முதல் நான்கு போட்டிகளையும் வென்ற நியூஸிலாந்து அணி, ஏற்கனவே ஒருநாள் தொடரைக்கைப்பற்றி விட்டது. அதற்கும் முன்பாகவே இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று டெஸ்ட் தொடரையும்அந்நாடு கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+