வேலையைவிட்டு ஓடும் அரசு ஊழியர்கள்
சென்னை:
அரசு ஊழியர்களின் சலுகைகளை தமிழக அரசு தொடர்ந்து பறித்து வருவதாலும், எப்போது வேண்டுமானாலும் ஊழியர்களின்எண்ணிக்கையை அரசு குறைக்கும் என்ற அச்சம் நிலவுவதாலும் சுமார் 10,000 பேர் தாங்களாகவே வி.ஆர்.எஸ். (விருப்ப ஓய்வுத் திட்டம்)மூலம் பதவி விலக முன் வந்துள்ளனர்.
இந்த முறை அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்களை ஆட்டிப் படைத்துவருகிறது. தொடர்ந்து அவர்களது சலுகைகள் பறிக்கப்பட்டன. போனஸ் நிறுத்தப்பட்டது. ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள் நிறுத்திவைக்கப்பட்டன.
இதற்காக தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியும் பலன் ஏற்படவில்லை. போராட்டம் நடத்திய பஸ் தொழிலாளர்களுக்குமூக்குடைப்பாக போக்குவரத்து தனியார்மயமாக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இனி ஸ்டிரைக் செய்தால் பதவி நீக்கம் செய்யும்வகையில் எஸ்மா சட்டத்தையும் கொண்டு வந்தது.
அரசுத் துறைகள் கலைப்பு, தனியார் வசம் அரசுப் பணிகள் ஒப்படைப்பு, பி.எப்பில் இருந்து கடன் பெறும் வசதி ரத்து, விடுமுறைகளை சரண்செய்து பணம் பெறுவது, அரசுக் கடன் ரத்து என அதிரடியாக அடுத்தடுத்து வந்த அறிவிப்புகள் அரசு ஊழியர்களை பெரும் அச்சத்தில்ஆழ்த்தியுள்ளன.
இது தவிர லஞ்சம் தாண்டவமாடும் அரசு அலுவலகங்களில் லஞ்ச-ஒழிப்புத்துறையினர் மூலம் அவ்வப்போது சோதனை நடத்திஊழியர்களை கையும் களவுமாகப் பிடித்து வருகிறது. ஆர்.டி.ஓ., கலெக்டர் ஆபிஸ், தாசில்தார் அலுவலகம் என பல இடங்களிலும்வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டு தான் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வேலையே பார்க்காமல் சம்பளம், லஞ்சம், திறமை இல்லாவிட்டாலும் வெறும் வயதை வைத்து பதவி உயர்வு, வருடம் தவறாமல் ஊதியஉயர்வு என்று வாழ்க்கையை அனுபவித்து வந்த அரசு ஊழியர்கள் இப்போது வெறுத்துப்போய் உள்ளனர்.
மேலும் அரசு ஊழியர்கள் தாங்களாகவே பதவி விலகிக் கொள்ளும் வகையில் சுய ஓய்வுத் திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வந்தது.இது சுய ஓய்வுத் திட்டம் என்று கூறப்பட்டாலும் வரைவில் இது கட்டாய ஓய்வுத் திட்டமாக மாறலாம் என்ற அச்சமும் அரசுஊழியர்களிடையே நிலவுகிறது.
நாமாகவே விலகிவிட்டால் ஓய்வுக் கால சலுகைகளையாவது பெறலாம், அரசே வீட்டுக்கு அனுப்பினால் அதுவும் கிடைக்காது என்ற பேச்சுஅரசு ஊழியர்களிடையே நிலவுகிறது. மேலும் 58 வயதில் ஓய்வு பெறும்போது கொடுக்க வேண்டிய சலுகைகளை அரசு குறைக்கும் என்றஅச்சமும் நிலவுகிறது.
வழக்கமாக ஒரு சராசரி அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் ரூ 3 முதல் ரூ. 5 வரை கிடைக்கும். ஆனால், நிதியில்லை என்று கூறி வெறும் ரூ. 1லட்சத்தை மட்டும் கையில் கொடுத்துவிட்டு மீதித் தொகைக்கு சிறுசேமிப்புப் பத்திரத்கைத கையில் தந்துவிட்டால் என்ன செய்வது என்றபயம் அரசு ஊழியர்களை ஆட்டிப் படைக்கிறது.
இது தவிர அரசுப் பணிக்கு ஆள் எடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் ஊழியர்கள் ஓய்வு பெறப் பெற மீதம் உள்ளவர்களுக்கு வேலைப்பளு ஏறிக் கொண்டே செல்கிறது. வேலையே பார்க்காமல் என்ஜாய் செய்து வந்த அரசு ஊழியர்கள் இதனால் திணற ஆரம்பித்துள்ளனர்.
இது போன்ற காரணங்களால் போட்டி போட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சுயமாகவே பதவி விலக வி.ஆர்.எஸ். திட்டம்மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை சுமார் 10,000 அரசு ஊழியர்கள் வேலையை விட்டு விலக முன் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 160 அரசுத் துறைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் 50 முதல் 60 பேர் விருப்ப ஓய்வு கேட்டுவிண்ணப்பம் செய்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ விருப்ப ஓய்வைக் கேட்கும் சூழ்நிலையை அரசு உருவாக்கிவிட்டது தான் உண்மை.
-->












Click it and Unblock the Notifications