திமுக சார்பில் கண்ணகி சிலை: நாளை கருணாநிதி திறக்கிறார்
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகம் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கண்ணகிசிலையை திமுக தலைவர் கருணாநிதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலையை தமிழக அரசு திடீரென அகற்றியது. இந்தச் சிலையால் முதல்வர்ஜெயலலிதாவுக்கு ஆகாது என ஜோதிடர் கூறியதால் சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சிலையை மீண்டும் கடற்கரையில் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசு காதில் வாங்கவேஇல்லை. இதனால் சிலையை வைக்கக் கோரி தமிழறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையில்உள்ளது.
தற்போது அந்த கண்ணகி சிலை எழும்பூர் அருங்காட்சியகத்தில் கிடக்கிறது.
இந் நிலையில் தேனாம்பேட்டையில் அண்ணாசாலைலேயே கண்ணகிக்கு இன்னொரு சிலை வைக்க திமுக முடிவு செய்தது. இதற்குஅனுமதி கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதங்களை திமுக எழுதியது. ஆனால், சிலை வைக்க அனுமதி தரப்படவில்லை.
இதனால் அண்ணா சாலையில் அமைந்துள்ள திமுக இளைஞரணி அலுவலக வளாகத்தில் இச் சிலையை வைக்க கருணாநிதி முடிவுசெய்தார்.
வெண்கலத்தால் ஆன இச் சிலை ரூ. 2 லடசம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை நாளை கருணாநிதி திறந்து வைக்கிறார்.
இது தொடர்பாக திமுக இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில்,
அண்ணா சாலையில் உள்ள தேனாம்பேட்டை சிக்னல் பகுதியில் கண்ணகி சிலையை நிறுவ திமுக இளைஞர் அணி சார்பில்மாநகராட்சிக்கும், அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டது. 12 முறை கடிதங்கள் அனுப்பப்பட்டும் ஒரு கடிதத்திற்கும் பதில் இல்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. இதனால் சிலையை அன்பகம் வளாகத்திலேயே நிறுவி விட கருணாநிதிஉத்தரவிட்டார்.
இதையடுத்து இச் சிலை நிறுவப்படவுள்ளது. பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் நாளை மாலை இச் சிலையை கருணாநிதி திறந்துவைகிக்கிறார் என்றார்.
தொல்காப்பியப் பூங்கா:
இதற்கிடையே கருணாநிதி எழுதிய தொல்காப்பியப் பூங்கா என்ற நூல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
சமீபத்தில் ஒரு வாரம் கோவாவில் தங்கியிருந்து இந்த நூலை கருணாநிதி எழுதி முடித்தார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஜனாதிபதி அப்துல்கலாம் கடிதம் அனுப்பியுள்ளார். கருணாநிதியின் பொங்கல்வாழ்த்துக் கடிதத்தைப் படித்து அதில் இருந்த தமிழ் செறிவில் மூழ்கித் திளைத்தேன் என்று கலாம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications