அமெரிக்கா மரியாதையாக நடக்க வேண்டும்: வட கொரியா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சியோல்:

அடுத்த நாட்டிடம் மரியாதையாக நடந்து கொள்ளுமாறு அமெரிக்காவை வட கொரியா கடுமையாக எச்சரித்துள்ளது.

சமீப காலமாக அமெரிக்கா- வட கொரியா இடையிலான மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. வட கொரியாவில் கம்யூனிச ஆட்சிநடக்கிறது. தென் கொரியாவில் பல கட்சி ஆட்சி நடக்கிறது.

இதில் தென் கொரியாவை அமெரிக்கா ஆதரித்து வருகிறது. ஆனால், ஏவுகணைகள் சோதனைகள் மூலம் அமெரிக்காவை அவ்வப்போதுவெறுப்பேற்றி வருகிறது வட கொரியா.

வட கொரியா தனது அணு ஆயுத ஆராய்சசிகளைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்தது. ஆனால், இது தனது மின்உற்பத்திகான ஆராய்ச்சி என வட கொரியா கூறியது. இதையடுத்து வட கொரியாவுக்கு இலவசமாக பெட்ரோலியம் தர அமெரிக்கா முன்வந்தது. இதைத் கொண்டு மின்சாரம் தயாரித்துக் கொள்ள வட கொரியாவும் முன் வந்தது.

இதைத் தொடர்ந்து தனது அணு ஆராய்சியை வட கொரியா நிறுத்தியது. ஆனால், திடீரென தான் வழங்கி வந்த பெட்ரோலியத்தைஅமெரிக்கா நிறுத்தியது. இதனால் வெறுப்படைந்த வட கொரியா தனது அணு ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கியது.

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதை வட கொரியா கண்டு கொள்ளவில்லை. தனது நாட்டில் இருந்த ஐக்கியநாடுகள் சபையின் அணு ஆயுதக் கண்காணிப்பு அதிகாரிகளை சென்ற மாதம் நாட்டை விட்டு விரட்டி விட்டது வட கொரியா.

இந் நிலையில் வட கொரியாவில் இருந்து ஏமன் நாட்டுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கக் கடற்படைநடுக்கடலில் தடுத்து நிறுத்தியது. உலக வர்த்தக விதிகளின்படி, சர்வதேச ஆயுத ஏற்றுமதி விதிப்படி தனது ஆயுங்கள் ஏமனுக்குஅனுப்பப்பட்டதாதவும் அதை உடனே அமெரிக்கா விடுவிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் வட கொரியா எச்சரித்தது.

இதையடுத்து அமெரிக்கா அந்த ஏவுகணைகளை அமைதியாக விடுவித்தது.

இந நிலையில் நேற்று தனது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வட கொரியா நேற்று விலகிக் கொள்வதாகஅறிவித்துவிட்டது. வட கொரியா வசம் அணு ஆயுதம் இருந்தால் அது தனது ஆதரவு நாடான தென் கொரியாவை மிரட்டும் எனஅமெரிக்கா அஞ்சுகிறது.

ஆனால், தென் கொரியாவிலும் அமெரிக்காவுக்கு ஆதரவு இல்லை. அந்த நாட்டு அரசு தான் அமெரிக்காவை ஆதரிக்கிறதே தவிர மக்கள்அமெரிக்காவை எதிர்த்து லட்சக்கணக்கில் கூடி போராட்டங்கள் நடத்துவது வழக்கமாகிவிட்டது.

இந்த அமெரிக்க எதிர்ப்புணர்வை வட கொரியா தனக்குச் சாதகமாய் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

எங்கள் மீது கட்டுப்பாடுகள் எதையாவது அமெரிக்கா விதித்தால் அது போர் தொடுப்பதற்குச் சமம் என்று வட கொரிய ஆட்சியாளர்கள்நேற்று முன் தினம் அறிவித்தனர்.

ஈராக்கைத் தாக்க உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதில் திக்கித் திணறி வரும் அமெரிக்கா இப்போதைக்கு வட கொரியாவிடம் மோதத்தயாராக இல்லை. பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்போம் என பலமுறை வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கோரிக்கைவைத்துவிட்டார்.

ஆனால், அமெரிக்காவிடம் பேச்சு நடத்தவோ, எந்த சலுகைகைளயும் பெறவோ தயாராக இல்லை என வட கொரியா இன்றுதிட்டவட்டமாகக் கூறிவிட்டது. மேலும் அமெரிக்காவுடன் போருக்குத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

எதிரியை எப்படி சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியும், எங்களைத் தாக்கும் எதிரிக்கு மறக்க முடியாத அடி கொடுப்போம்.ஏவுகணைகளைக் கொண்டு அமெரிக்காவுடன் சண்டையிட நாங்கள் தயார் என வட கொரியா கூறியுள்ளது.

இன்று வட கொரிய அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவுக்கு எகிராக வட கொரிய மற்றும் தென் கொரிய மக்கள் ஒன்றுசேர வேண்டும். இரு கொரியாக்களும் இணைந்துவிடாமல் தடுக்கும் கேவலமான செயலில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

பல வகையான ஏவுகணைகளைத் தானே தயாரிக்கும் திறன் கொண்ட வட கொரியாவிடம் அணு ஆயுதமும் வந்துவிட்டால் அது தனதுபாதுகாப்புக்கு மிகவும் இடைஞ்சலாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.

ஆனால், ஈராக் மாதிரி நினைத்த நேரத்தில் தாக்கும் அளவுக்கு பலவீனமான நாடும் அல்ல வட கொரியா. அந்த நாட்டுக்கு ரஷ்யா, சீனாவின்முழு ஆதரவும் உள்ளது. குறிப்பாக வட கொரியாவை அமெரிக்கா தாக்கினால் சீனாவின் கோபத்தைச் சமாளிக்க முடியாது. இதனால் வடகொரியாவுடன் பேச்சு நடத்த அமெரிக்கா எவ்வளவோ இறங்கி வந்து கொண்டிருக்கிறது.

இந் நிலையில் இன்று வட கொரிய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலில் அமெரிக்கா மற்ற நாடுகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறரை கேவலமாக நடத்துவதை அமெரிக்கா தனது உரிமை என்று கருதினால் அதற்கு பதிலடி தர நாங்கள் தயார்.மரியாதையாக நடப்பது தான் அமெரிக்காவுக்கு நல்லது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தனது ராணுவத்தையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளது வட கொரியா.

ஈராக் விவகாரத்தில் இன்னும் சர்வதே ஆதரவைத் திரட்ட முடியாமல் திணறி வரும் அமெரிக்காவை இந்த நேரம் பார்த்து வட கொரியாகண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+