-அப்பாவி முஸ்லீம்களை துன்புறுத்தாதீர்கள்: அரசுக்கு கோரிக்கை
சென்னை:
சந்தேகத்தின் பேரில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வது போன்ற செயல்களை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்றுஅகில இந்திய மில்லி கவுன்சில் கோக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கவுன்சிலின் பொதுச் செயலாளர் இனாயத்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பெயல் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்துவதை தமிழக அரசும், காவல்துறையும் கைவிட வேண்டும்.
சமீபத்தில் 25 அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒரு தவறும் செய்யாதவர்கள்.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சிறுபான்மை அமைப்புகளும் கண்டித்துள்ளன.
அந்த சட்டம் சில இடங்களில் காவல்துறையினரால் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டத்தைக் கூறி காவல்துறையினர்சிறுபான்மை மக்களை மிரட்டுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதுவும் தவிர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications