10 தமிழ்நாடு விடுதலைப் படை நக்சலைட்டுகள் கைது
கடலூர்:
தமிழ்நாடு விடுதலைப் படை நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளை கடலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூரைச் சேர்ந்தவர் வியாபாரி நடேசன். இவர், பாண்டிச்சேயைச் சேர்ந்த குணசீலன் என்பவருக்கு ரூ. 10 லட்சம் கடனாகவழங்கியிருந்தார். ஆனால் குணசீலன் பணத்தைத் திருப்பித் தராமல் அலைக்கழித்து வந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த ன்னாள் தொண்டர் பரூக் கான் என்பவரை அணுகிய நடேசன்,குணசீலனிடமிருந்து பணத்தைப் பெற்றுத்தர கோரியுள்ளார். இதற்காக பரூக் கானுக்கு ரூ. 1.25 லட்சம் முன் தொகையாகவும்கொடுத்துள்ளார்.
இதையடுத்து தனது நண்பர்கள் சிலரோடு (அனைவரும் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள்) பாண்டிச்சேரிக்கு சென்றார்.அங்கு குணசீலன் என்று நனைத்து அரசு ஊழியர் ஒருவரை தவறுதலாகக் கடத்தி வந்தனர்.
ஆனால், உண்மை தெந்ததும் அவரை விடுவித்து விட்டனர். விடுவிக்கப்பட்ட அரசு ஊழியர், பரூக் கான் உள்ளிட்டவர்கள் குறித்துபோலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து பரூக் கான் கும்பலைச் சேர்ந்தவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆயினும் அவர்கள்ஜாமீனில் வெளியே விடப்பட்டனர்.
அதன் பிறகு பாண்டிச்சேயை விட்டு கிளம்பிய பரூக் கான் கும்பல், நேராக வெள்ளிக்கிழமை அதிகாலை நடேசன் வீட்டுக்கு வந்தது.அவரிடம் கூடுதலாக பணம் கேட்டுள்ளனர். அவர் தர முடியாது என்று மறுத்துள்ளார்.
இதையடுத்து அவரை கொன்று விடுவோம் என்று அவர்கள் மிரட்டினர். அப்போது நடேசனின் மகன், வீட்டை விட்டு நைசாக வெளியேறி,சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை மறித்து நடந்ததைக் கூறினார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து பரூக்கான் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்தனர்.
இவர்களை விசாரித்தபோது தான் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
பரூக் கானுடன் கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: முத்து, சரவணன், சரவணன், வீரமுத்து, ஜான்சன், ஜெயக்குமார், மகாலிங்கம்,தமிழவன், சுரேஷ். இவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications