பவானியில் அணை: கோவையில் கேரள முதல்வரின் கொடும்பாவி எரிப்பு
கோயம்புத்தூர்:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சித்து வருவதைக் கண்டித்து அம்மாநில முதல்வர் ஏ.கே.அந்தோணியின் கொடும்பாவியை தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பினர் இன்று கோயம்புத்தூரில்எரித்தனர்.
தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவுக்குள் பாயும் பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான பணிகளைஅம்மாநில அரசு தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேரள அரசின் அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில்அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் இன்று காலை கோயம்புத்தூரில் கேரளமுதல்வரின் கொடும்பாவியை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தோணியின் கொடும்பாவியை எரித்த பெரியார் திராவிடர் கழகத்தினரைப் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, கேரள அரசின் அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து கோயம்புத்தூரில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பான போராட்டம் குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்றுஅப்போது முடிவெடுக்கப்பட்டது. அதிமுக, திமுக, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்டனர்.
-->


Click it and Unblock the Notifications
