முதல் இந்திய விண்வெளி வீராங்கனையின் 2வது விண் பயணம்
டெல்லி:
இந்தியாவில் பிறந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா தன்னுடைய 2வது விண்வெளிப்பயணத்தை வரும் 16ம் தேதி துவக்குகிறார்.
கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தன்னுடைய முதல் விண்வெளிப் பயணத்தை சாவ்லா மேற்கொண்டார்.
அப்போது சுமார் 6.5 மில்லியன் மைல்கள் தூரத்திற்கு விண்வெளியில் சுற்றினார் சாவ்லா. பூமியை 252 முறைசுற்றிய சாவ்லா, மொத்தம் 375 மணி நேரம் விண்வெளியிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் வரும் 16ம் தேதி அவருடைய இரண்டாவது விண்வெளிப் பயணம் துவங்கவுள்ளது.
அமெரிக்காவின் கென்னடி விண்வெளித் தளத்திலிருந்து கொலம்பியா விண்வெளி ஓடத்தின் மூலம் ஸ்பேஸ்டிரான்ஸ்போர்ட் ஷட்டில்-107 என்ற விண்கலத்தில் விண்ணுக்குச் செல்லவுள்ளார் சாவ்லா.
அவருடன் வேறு ஆறு விண்வெளி வீரர்களும் அதே விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்கின்றனர்.விண்வெளியில் சுமார் 80 வகையான ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபடவுள்ளனர்.
கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விண்வெளி வீரர்களும் வரும் பிப்ரவரி 1ம் தேதி பூமிக்குத் திரும்புவார்கள் என்றுஅமெரிக்க விண்வெளி நிறுவனமான "நாசா" வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் டெல்லிக்கு வந்திருந்த சாவ்லா, என்னுடைய இந்த இரண்டாவது விண்வெளிப் பயணத்தை ஆவலுடன்எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு இந்தியப் பெண்ணான சுனிதா லின் வில்லியம்ஸ் விண்வெளிக்குச்செல்வதற்காக சமீபத்தில்தான் "நாசா"வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளிக்குச்செல்லும் இரண்டாவது இந்திய வீராங்கனை இவர் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications