ஐ.நா. போலீஸ் ஆலோசகராக கிரண் பேடி நியமனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஐக்கிய நாடுகள் சபை அமைதிக் குழுவின் சிவிலியன் போலீஸ் ஆலோசகரான இந்தியாவின் முதல் பெண்ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னான்தான் கிரண் பேடியை நியமித்துள்ளார்.

தற்போது டெல்லி மாநகர சிறப்பு போலீஸ் கமிஷனராகப் பணியாற்றி வரும் கிரண் பேடி, இந்தியாவிலேயேபெரிய டெல்லி திஹார் சிறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

திஹார் சிறைக் கைதிகளுக்காகவும் அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் அவர் அறிமுகப்படுத்திய பல புதியதிட்டங்கள் கிரண் பேடியை உலக அளவில் பேச வைத்தன.

53 வயதான கிரண் பேடிக்கு ஐ.நா. சபையில் பதவி வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டுவந்தது.

அதன்படி அவரை ஐ.நா. அமைதிக் குழுவின் சிவிலியன் போலீஸ் ஆலோசகராக நியமித்துள்ளார் கோபிஅன்னான். ஐ.நாவில் இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியப் பெண் கிரண் பேடி என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று ஆண்டுகளுக்கு கிரண் பேடி இப்பதவியில் நீடிப்பார். அவருடைய திறமையைப் பொறுத்து பதவி நீட்டிப்பும்வழங்கப்படும்.

ஐ.நா. அமைதிக் குழுவில் உள்ள போலீசாருக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள், புதிய திட்டங்களை வகுத்தல, சட்டவிவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய பணியில் கிரண் பேடி ஈடுபடுவார்.

வேறொரு வேலையாக நாளை ஐ.நா. சபைக்குச் செல்லும் கிரண் பேடி, விரைவில் இந்தப் புதிய பதவியையும்ஏற்கிறார்.

கிரண் பேடி ஏற்கனவே மகாசேசே விருது, ஜெர்மனியின் ஜோசப் அறக்கட்டளை விருது, அமெரிக்காவின் கிட்சாப்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் நம் நாட்டிலேயே ஏராளமான வீரதீர சாகசவிருதுகளையும் அவர் வாங்கிக் குவித்துள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+