சாத்தான்குளம் இடைத் தேர்தல்: எதிர்க் கட்சிகள் விதண்டாவாதம்- ராமதாஸ் வேதனை
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தல் விஷயத்தில் முக்கிய எதிர்க் கட்சிகள் தேவையற்ற விதண்டாவாதம் பேசிவருவதால் அங்கு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியமே இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறினார்.
இன்று சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு அதிமுகவை எதிர்த்து பொதுவேட்பாளரை நிறுத்தி அக்கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று யோசனை கூறினேன்.
ஆனால் முக்கிய எதிர்க் கட்சிகள் அனைத்துமே தேவையற்ற விதண்டாவாதம் பேசி வருகின்றன.
எனவே அந்தத் தொகுதியில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல்போய்விட்டது. இனியும் பொது வேட்பாளர் என்ற பேச்சு எழும் என்று நான் நம்பவில்லை.
இந்த இடைத் தேர்தலில் எங்கள் நிலை குறித்து விரைவில் நடைபெறவுள்ள பா.ம.கவின் நிர்வாகக் குழுவில் இறுதிமுடிவு அறிவிக்கப்படும்.
தற்போதைய அதிமுக ஆட்சியில் இட ஒதுக்கீடு முறைகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. கடந்த திமுகஆட்சிக் காலத்தில் இது முறையாகச் செயல்பட்டு வந்தது என்றார் ராமதாஸ்.
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து திமுக, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தீவிரஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
சென்னையில் இன்று நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில், சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து தூத்துக்குடிமற்றும் திருநெல்வேலி மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
அதேபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் இன்று சத்தியமூர்த்தி பவனில் கூடி சாத்தான்குளம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் இதுதொடர்பாகக் கட்சித் தலைமையிடம் விளக்கிக்கூறினார்.
இதற்கிடையே பா.ஜ.கவின் தேசியப் பொதுச் செயலாளரான இல. கணேசன் இன்று தேனியில் நிருபர்களிடம்பேசுகையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடுவதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். எங்கள் கட்சிக்கு இங்குவெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாகவே உள்ளது.
இங்கு போட்டியிடும் வேட்பாளர் குறித்து வரும் 18ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில செயற்குழுக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதன் பின்னர் 21ம் தேதி கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடுவேட்பாளரின் பெயரை அறிவிப்பார் என்றார் கணேசன்.
சாத்தான்குளத்தில் வரும் பிப்ரவரி 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications