திமுக-பா.ஜ.க. இடையே அறிக்கைப் போர் தீவிரம்
சென்னை:
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குபா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. பா.ஜ.கவின் இச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர்கருணாநிதி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து கருணாநிதிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே அடுத்த சுற்று மோதல் ஆரம்பமாகியுள்ளது.
மத்திய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.கவும், திமுகவும் கடந்த பல மாதங்களாகவேகடுமையாக உரசிக் கொண்டிருக்கின்றன.
அறிக்கை போர்:
சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதற்கு பா.ஜ.க.தீவிரமாக ஆதரவு அளித்தது.
இதைச் சிறிதும் விரும்பாத கருணாநிதி இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறத் தொடங்கவே, அவருக்குஎதிரான கருத்துக்களை இல. கணேசன் கூற ஆரம்பித்தார்.
நாள்தோறும் இரண்டு தலைவர்களும் மாறி மாறித் தாக்கிக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் சிறிது சிறிதாக அந்த அறிக்கைப் போர் நின்று விட்டது.
திமுகவின் தீர்மானம்:
இந்நிலையில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்ப்பதாக நேற்று முன்தினம்நடைபெற்ற திமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ.கவுடன் அதிமுக நெருங்கிக் கொண்டு வரும் நிலையில் தனது நிலையைத் தெளிவாக்கினார் கருணாநிதி.கருணாநிதிக்கு பா.ம.க., வைகோ ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க. எரிச்சல்:
ஆனாலும் திமுகவின் தீர்மானம் தமிழக பா.ஜகவை உசுப்பேற்றியுள்ளது. சென்னையில் நிருபர்களிடம் பேசியபா.ஜ.க. தேசியச் செயலாளர் இல. கணேசன்,
மத்திய அரசின் பொருளாதார, தாராளமய மற்றும் தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்து திமுக தீர்மானம்நிறைவேற்றியுள்ளது எங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
இதுபோன்ற கொள்கைகளைச் செயல்படுத்தும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துகட்சிகளையும் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுப்போம்.
மேலும் திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் அமைச்சரவையில் உள்ளனர். அப்படிஇருந்தும் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அப்படியே அவற்றை விமர்சிக்க திமுக விரும்பினாலும், பொது இடங்களில் வெளிப்படையாக அந்தக் கட்சிஇவ்வாறு பேசக் கூடாது. அதற்குரிய அமைப்பிடம்தான் கூறியிருக்க வேண்டும்.
மத்திய அரசைப் பொறுத்தவரை நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலன்களையும் கருத்தில் கொண்டேதிட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன என்றார் இல. கணேசன்.
கருணாநிதி பதிலடி:
இதையடுத்து இல. கணேசனுக்கு இன்று கருணாநிதி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக நிறைவேற்றியுள்ள தீர்மானம் தே.ஜ. கூட்டணியின் கொள்கைகளுக்குப் புறம்பானது அல்ல. நம் நாட்டிலுள்ளஒவ்வொரு குடிமகனுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தே.ஜ. கூட்டணியில் உள்ள முக்கியஅம்சமாகும்.
அதை மீறும் மத்திய அரசின் கொள்கைகளை எவ்வாறு எதிர்க்காமல் இருக்க முடியும்? எனவே இந்தியத்தொழில்துறையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் மத்திய அரசின் சில கொள்கைகளைதிமுக எதிர்த்துள்ளது.
லாபத்தில் இயங்கும் நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்ப்பதை ஆரம்பத்திலிருந்தே திமுக எதிர்த்துவந்துள்ளது. பி.பி.சி.எல்., எச்.பி.சி.எல். மற்றும் கப்பல் நிறுவனம் ஆகியவை தனியார்மயமாக்கப்படுவதை தே.ஜ.கூட்டணியில் உள்ள பல மூத்த அமைச்சர்கள் கூட எதிர்த்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
எனவே தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்குஎதிராக நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
ஏராளமான தொழிலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தனியார்மயமாக்கும் திட்டத்தை பா.ஜ.க. ஏற்கிறதா?தொழிலாளர்கள் வேலையில்லாமல் திண்டாடுவதைப் பார்ப்பது தான் அக்கட்சியின் விருப்பமா?
நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் திமுகவின் இந்தத்தீர்மானத்தை வரவேற்கத்தான் செய்வார்கள்.
அதை விட்டுவிட்டு இவ்வாறு தேவையில்லாமல் பதில் அறிக்கைகளை வெளியிட்டு இப்பிரச்சனைகளை அரசியல்ரீதியாகப் பார்க்க இல. கணேசன் முயல்கிறார் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications