லாட்டரிக்குத் தடை: வியாபாரி, மனைவி, குழந்தை தற்கொலை
சோழவந்தான்:
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம்சோழவந்தானைச் சேர்ந்த ஒரு லாட்டரி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடையமனைவி தன் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
சோழவந்தானைச் சேர்ந்த காதர் பாட்ஷா என்பவர் சென்னையில் லாட்டரிச் சீட்டு வியாபாரம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை செய்வதற்குத் தடை விதித்தது.
இதையடுத்து காதர் பாட்ஷா சென்னையிலிருந்து சொந்த ஊரான சோழவந்தானுக்குத் திரும்பினார். இங்கு வேறுஏதாவது வேலை கிடைக்குமா என்று பல இடங்களில் விசாரித்துப் பார்த்தார்.
ஆனால் காதர் பாட்ஷாவுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன அவர் நேற்றுமுன்தினம் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மகபூப் ரோஜா, தன் குழந்தையைக் கிணற்றில் வீசிக்கொன்றுவிட்டு தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டவிஷயம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் விசாரணை:
இதற்கிடையே வரும் 21ம் தேதி வரை லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தொடர சென்னை உயர் நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டது.
லாட்டரி தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்முன்னிலையில் விசாரணை நடந்தது.
லாட்டரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்களின் சார்பாக, காங்கிரஸ்ஜனநாயகப் பேரவையின் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான ப. சிதம்பரம் வாதாடினார்.
இன்று மாலை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியம் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். வரும்21ம் தேதி வரை லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தொடரலாம் என்று அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.
இவ்வழக்கு தொடர்பாக நிருபர்களிடம் சிதம்பரம் கூறுகையில்,
இரவோடு இரவாக இந்தத் தடையை அமல்படுத்தியிருக்க வேண்டாம். இதனால் எத்தனையோ வியாபாரிகள்பாதிக்கப்பட்டுள்ளனர். பல லாட்டரிக் குலுக்கல்கள் அடுத்தடுத்த தேதிகளில் நடக்கவிருந்தன. இதனால் லாட்டரிச்சீட்டு வாங்கிய ஏராளமான மக்களும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஏதாவது பரிசுகள் விழுந்தால் எப்படி அவற்றை வழங்குவது என்பது போன்ற சிக்கல்கள் உள்ளன.எனவே திடுதிப்பென்று இரவோடு இரவாக லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சில நாட்களாவது அவகாசம் அளித்திருக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications