நாகர்கோவில் அருகே வக்கீல் ஓட ஓட விரட்டிக் கொலை: கந்து வட்டி ரவுடிகள் அட்டகாசம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே வக்கீல் ஒருவரை கந்து வட்டி வசூலிக்கும் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிஅரிவாளால் வெட்டிக் கொன்றது.
நாகர்கோவிலை அடுத்த சிராயன்குழியைச் சேர்ந்தவர் தங்ககுமார். 38 வயதான இவர் குழித்துறை நீதிமன்றத்தில்வக்கீலாகப் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பள்ளியாடி என்ற இடத்திலிருந்து தன்னுடைய பைக்கில் தங்ககுமார் வந்துகொண்டிருந்தபோது, திடீரென்று ஆறு பேர் அவரை வழிமறித்தனர்.
அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்ககுமார், உடனே பைக்கை விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தார். ஆனால்அந்த ஆறு பேர் கும்பல் அவரை விடாமல் துரத்தியது.
பின்னர் தங்ககுமாரைச் சுற்றி வளைத்த அந்த ஆறு பேரும் அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டினர். பலத்தகாயமடைந்த அவர் அருகிலிருந்த ஒரு தோப்பில் விழுந்து இறந்து போனார்.
நேற்று காலைதான் அவர் அங்கு பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் நேற்றுபெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டன.
போலீசார் விரைந்து சென்று தங்ககுமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு போன் செய்ததங்ககுமார், "எனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. என் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளது" என்று புகார் கூறியிருந்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த கந்துவட்டி வசூலித்து வரும் ரவுடிக் கும்பல்தான் தங்ககுமாரைக் கொலை செய்ததாகத்தெரிய வந்துள்ளது.
கந்து வட்டி கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கும் பணியில்தங்ககுமார் ஈடுபட்டிருந்தார். இதைப் பிடிக்காத அந்த ரவுடிகள்தான் அவரை வெட்டிக் கொன்றுள்ளனர்.
தங்ககுமார் கொலை சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டனர்.
தங்ககுமாருக்கு உஷா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications