பாஸ்போர்ட்டு விண்ணப்பிக்க எளிய வசதி: சென்னையில் அறிமுகம்
சென்னை:
புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருபவர்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருப்பதைத்தவிர்ப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்போர்ட் எடுப்பதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் நீண்ட வரிசைகளில் நின்று கொண்டிருப்பது அந்தஅலுவலகங்களில் அன்றாடம் காணும் நிகழ்ச்சிதான்.
இவ்வாறு அவர்கள் நின்று கொண்டு நேரத்தை விரயப்படுவதைத் தவிர்ப்பதற்காகப் புதியதொரு திட்டத்தைசென்னை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மதிவதனன் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
இனி யாரும் வந்து மணிக்கணக்கில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.28213553, 28213563 ஆகிய இரண்டு எண்களில் ஏதாவது ஒரு எண்ணுக்குத் தொலைபேசி செய்து"அப்பாயின்ட்மெண்ட்" பதிவு செய்து கொள்ள வேண்டும்.
"அப்பாயின்ட்மெண்ட்" கொடுக்கப்பட்ட நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து, 20 அல்லது 30 நிமிடங்களில்பாஸ்போர்ட் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுத்து விட்டுச் சென்று விடலாம்.
இதனால் விண்ணப்பதாரர்களுக்கு நேரம் மிச்சமாகிறது. பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களுக்கும் சிரமங்கள்குறையும்.
தங்களுடைய விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும் இந்தத் தொலைபேசி எண்களைத்தொடர்பு கொண்டு மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நாளை விடுமுறை என்பதால்நாளை மறுநாள் முதல் மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவிலேயே சென்னையில்தான் இந்தத் திட்டம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்மதிவதனன்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications