சிறுவர்களின் போகி தீயில் சிக்கி 2 மாடுகள் பலி
காஞ்சிபுரம்:
போகிப் பண்டிகைக்காக கொளுத்தப்பட்ட தீயில் 2 மாடுகள் சிக்கி இறந்தன.
வீட்டில் உள்ள பழைய பொருள்களை ஒழித்துக் கட்டத் தான் போகி கொண்டாடப்படுகிறது. ஆனால், சமீப காலமாக ரோட்டில்கிடக்கும் குப்பைகளைப் போட்டு எரிப்பது, டயர்களை ரோட்டில் போட்டு எரிப்பது என்று போகி வேறு உருவம் எடுத்துவருகிறது.
சிறுவர்கள், எரியா தாதாக்கள் என பல தரப்பினரும் ரோட்டில் தீயை எரித்து சுற்றுச்சூழலைக் கெடுத்து வருகின்றனர்.
பல நேரங்களில் இந்த விளையாட்டு போகித் தீயினால் தீ விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த முறை போகித் தீக்கு 2மாடுகள் பலியாகியுள்ளன. உத்தரமேரூர் அருகே நெய்யாடிவாக்கம் கிராமத்தில் இச் சம்பவம் நடந்தது.
ரோட்டில் டயர்களையும் குப்பைகளையும் போட்டு சிலர் எரித்துக் கொண்டிருந்தனர். அப்போது இதிலிருந்து கிளம்பியதீப்பொறிகளால் அருகில் இருந்த மாட்டுக் கொட்டைகையில் தீப் பிடித்துக் கொண்டது.
இதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் மாட்டுக் கொட்டகை முழுவதும் தீ பரவியது. கொட்டகையில் நின்றிருந்த இருமாடுகளும் அலறின. ஆனால், போகி தீ உற்சாகத்தில் சிறுவர்கள் எழுப்பிய சத்தத்தில் மாடுகள் எழுப்பிய அலறல் ஒலி யாருக்கும்கேட்காமல் போனது.
பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்த இத் தீயில் இரு மாடுகளும் கருகி இறந்தன. இவை பொன்னுசாமி என்ற விவசாயிக்குசொந்தமானவை.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போலத்தான் சென்னையில் நூற்றுக்கணக்கான டயர்கள் எரிக்கப்பட்டதில் நகரின் பல பகுதிகளும் புகை மூட்டத்தில்சிக்கின. 222 பேர் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications