3 நாட்களில் 4 சாலை விபத்துகள்: 21 பேர் பலி- ஜெ. நிதியுதவி
சென்னை:
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட 4 சாலை விபத்துக்களில் 21 பேர் வரை உயிரிழந்தனர். அவர்களின்குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 13ம் தேதி ஈரோடு அருகே 6 பேரும், நேற்று மதுரை-வாடிப்பட்டி அருகே கூட்டத்தில் கார் புகுந்ததில்பழனிக்கு பாதயாத்திரை சென்ற 5 பேரும், சிவகங்கை அருகே 2 பேரும் என 13 பேர் சாலை விபத்துக்களில்உயிரிழந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி-காந்திமண்டபம் வீதியைச் சேர்ந்த அழகேஷ்குமார் (32) என்பவர் தன் குடும்பத்தினருடன் சூலக்கல்மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காரில் சென்றார்.
கோயம்புத்தூர் சாலையில் உள்ள வடக்கிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்றஒரு பஸ்சை கார் முந்திச் செல்ல முயன்றது.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று இந்தக் காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. அந்த பஸ்மேட்டுப்பாளையத்திலிருந்து பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
மோதிய வேகத்தில் கார் சுக்கல் சுக்கலாக நொறுங்கி அதன் முன் பகுதி பஸ்சிற்குள் சிக்கிக் கொண்டது.
இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் இருவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில் இறந்தனர்.
அழகேஷ்குமார் (32), மனைவி ரேணுகா (25), மகள் கீர்த்தனா (3), தாய் மாணிக்கம் (50), மாமியார் மஞ்சுளா (45),மைத்துனர் சிவக்குமார் (22), மனைவியுடைய உறவினரின் மகன் சிவக்குமார் (2) மற்றும் பக்கத்து வீட்டுக்காரரானவீரபத்திரன் என்பவரின் மனைவி சரோஜினி (45) ஆகிய எட்டு பேரும்தான் உயிரிழந்தவர்கள்.
விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் நிதியுதவி:
இந்நிலையில் சாலை விபத்துக்களில் உயிரிழந்த 21 பேரின் குடும்பத்தினருக்கு ஜெயலலிதா தலா ரூ.50,000நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கடந்த மூன்று நாட்களில் சாலை விபத்துக்களில் இறந்த 21 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000 நிதியுதவிஅளிக்க உத்தரவிட்டுள்ள முதல்வர், அவர்களது குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெவித்துள்ளார்.
அதேபோல, விபத்தில் படு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000 நிதியுதவியும், லேசான காயம்அடைந்தவர்களுக்கு ரூ.6,000 நிதியுதவியும் அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த உதவிகள் அளிக்கப்படுகின்றன.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகளை விரைந்து அளிக்குமாறு ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை மற்றும்சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அந்தச் செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications