திமுக விரும்பினால் வெளியேறலாம்: பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறுவது அவர்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது என்று பா.ஜ.க.தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார்.

சென்னையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம்கூறுகையில்,

மத்திய அரசின் தனியார்மய மற்றும் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து திமுக தீர்மானம்நிறைவேற்றியிருப்பது எங்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மத்திய அரசின் தாராளமயக் கொள்கைகளை முனைப்புடன் செயல்படுத்தியவர்களில் மத்திய தொழில் துறைஅமைச்சரான திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறனும் ஒருவர்.

தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள யாருமே தங்களுடைய மாறுபட்ட கருத்துக்களை கூட்டணியின் கூட்டுசெயற்குழுக் கூட்டத்திலோ அல்லது அரசுக்குக் கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

இதற்காக மத்திய அமைச்சரவையிலிருந்தோ, கூட்டணியிலிருந்தோ திமுக வெளியேறுமா என்பதைக் கூற முடியாது.அது அவர்களுடைய விருப்பம்.

கூட்டணியில் தற்போதுள்ள அனைவருமே அதில் தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.திமுகவுடன் மோதல் போக்கை வளர்த்துக் கொள்ள பா.ஜ.க. விரும்பவில்லை.

இருந்தாலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை இனி ஒருபோதும் கைவிட முடியாது.உலகமயமாக்கல் கொள்கையிலிருந்தும் எந்த ஒரு நாடும் விலகி இருக்க முடியாத சூழ்நிலைதான் நிலவுகிறது.

இருந்தாலும் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம்நமக்கு உள்ளது.

சாத்தான்குளத்தில் ஏற்கனவே பா.ஜ.க. போட்டியிட்டதால் மீண்டும் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்படும்என்றார் வெங்கய்யா நாயுடு.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+