புலிகளின் அதிசக்தி வானொலி ஒலிபரப்பு தொடக்கம்
யாழ்ப்பாணம்:
விடுதலைப்புலிகளின் வானொலியான "வாய்ஸ் ஆப் டைகர்சின்" மேம்படுத்தப்பட்ட ஒலிபரப்பு இன்று காலை முதல்தொடங்கப்பட்டுள்ளது.
நார்வேயிலிருந்து ஒரு சில மாதங்களுக்கு முன் சக்தி வாய்ந்த வானொலி ஒலிபரப்புக் கருவிகளைப் புலிகள்இறக்குமதி செய்திருந்தனர். அந்தக் கருவிகள் மூலம் "வாய்ஸ் ஆப் டைகர்ஸ்" ஒலிபரப்பின் திறன்மேம்படுத்தப்பட்டது.
இதுவரை வட-கிழக்குப் பகுதிகளில் மட்டுமே கேட்டு வந்த இந்த ரேடியோ இப்போது இலங்கையின்பெரும்பாலான பகுதிகளில் கேட்கிறது. ஆனாலும் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ளகொழும்பில் இந்த ஒலிபரப்பை தெளிவுடன் கேட்க முடியவில்லை.
அதே நேரத்தில் ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் இந்த ரேடியோஒலிபரப்பை கேட்க முடியும் என்று கூறப்படுகிறது.
எப்.எம். அலைவரிசையின் 98 மெகா ஹெர்ட்ஸ் என்ற அலைவரிசை மூலம் இது ஒலிபரப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications