வைகோ விவகாரம்: பிரதமருக்கு நெருக்குதல் தர மதிமுக முடிவு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வைகோ கைது விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோரைச் சந்திக்க மதிமுகதிட்டமிட்டுள்ளது.

இதுவரை இந்தக் கைது விவகாரத்தில் மத்திய அரசின் உதவி எதையும் கோர மாட்டோம் என வைகோ கூறி வந்தார். ஆனால்,தங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் நெருங்கி வரும் பா.ஜ.கவுடன்நேருக்கு நேர் மோத வைகோ தயாராகிவிட்டார்.

இதையடுத்து பிரதமரைச் சந்தித்து இந்தக் கைது விவகாரத்தில் தலையிடுமாறு நெருக்குதல் தர மதிமுக முடிவு செய்துள்ளது.இதனை மத்திய அமைச்சர் கண்ணப்பன் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வைகோ கைது குறித்து குடியரசுத் தலைவர் கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோரிடம் மக்கள் மற்றும் பல தரப்பிலிருந்துவெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்களைத் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளோம். வாஜ்பாயிடம் ஒரு கோரிக்கை மனுவும் தரப்படும்.

வைகோவை விடுவிக்கக் கோரி தமிழகம் முமுழுவதும் 1 கோடி கையெழுத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கையெழுத்துக்கள்அடங்கிய தொகுப்பையும் அவர்களிடம் கொடுக்கவுள்ளோம். 22ம் தேதி பிரதமரையும், 23 ம் தேதி குடியரசுத் தலைவரையும்சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது என்றார் கண்ணப்பன்.

பவானியில் அணை: வைகோ தந்தி

இதற்கிடையே, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் பணிகளைத் துவங்கியிருப்பதைக் கண்டித்து அம்மாநில முதல்வர் ஏ.கே. ஆண்டனிக்குவைகோ தந்தி அனுப்பியுள்ளார்.

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ அங்கிருந்தவாறே தந்தி அனுப்பியுள்ளார். அதில்,

பவானி மற்றும் கபினி அணைகளின் குறுக்கே கேரள அரசு அணை கட்டினால் பல்லாயிரக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.எனவே இரு மாநிலங்களுக்கும் இடையிலான நல்லுறவைத் தொடர்ந்து பேணும் பொருட்டு, அணை கட்டும் முயற்சியைக் கேரள அரசு கைவிட வேண்டும்என்று அந்தத் தந்தியில் கூறியுள்ளார் வைகோ.

இதேபோல் அனைத்து மதிமுக தொண்டர்களும் கேரள அரசுக்குத் தந்திகளை அனுப்ப வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளதாகஅக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மதிமுக அவைத் தலைவர் எல். கணேசன், துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை, மத்திய அமைச்சர் கண்ணப்பன் ஆகியோரும் கேரள முதல்வருக்குத்தந்திகளை அனுப்பியுள்ளனர்.

பவானி மற்றும் கபினி அணைகளின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் முயற்சிகளைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கட்சிபாகுபாடின்றி அம்மாநில முதல்வருக்கு தந்திகளை அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

திமுகவுடன் நெருங்கி வரும் நிலையில், கருணாநிதியின் இந்த யோசனையை வரவேற்றுள்ள வைகோ தற்போது தந்தி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+