ஜனாதிபதி மாளிகையில் வள்ளுவர் சிலை: கலாம் இன்று திறந்து வைக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை,ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்று திறந்து வைக்கிறார்.

ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சலோகத்திலான திருவள்ளுவர் சிலைக்கு "அய்யன் திருவள்ளுவர்சிலை" என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள சிற்பரத்னா ஆர்ட் காலரியில் இந்த சிலை செய்யப்பட்டது. தலைமைச் சிற்பிசெல்வராஜாவின் நேரடி மேற்பார்வையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டு டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து திருவள்ளுவர் தினமான இன்று இந்த வள்ளுவர் சிலையை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் நிறுவப்பட்டுள்ள 133 அடி உயர அய்யன்திருவள்ளுவர் சிலையை மாதிரியாகக் கொண்டே இந்த குட்டிச் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை-மெரீனா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர்சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் பொன்னையன், ஓ. பன்னீர்செல்வம், ஜெயக்குமார், வளர்மதி,சென்னை மாநகர துணை மேயர் கராத்தே தியாகராஜன், எம்.எல்.ஏவும் நடிகருமான ராதாரவி ஆகியோர் மாலைஅணிவித்தனர்.

இந்நிலையில் பாண்டிச்சேரியிலும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள்மற்றும் அதிகாரிகள் ஆகியோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+