சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஆரம்பம்: இனி ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் பல பகுதிகளும் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் தலைநகரானசென்னையில் குடிநீர் பஞ்சம் ஆரம்பமாகிவிட்டது.

வருடந்தோறும் சட்டமன்றத்தில் தவறாமல் பட்ஜெட் தாக்கல் செய்வது மாதிரி சென்னையில் தண்ணீர் பஞ்சம்என்பது வருடாந்திர அவலமாக மாறிவிட்டது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் அரசியல் அணுகுமுறையோ, செயல்திட்டங்களோ இதுவரை வந்த எந்த அரசிடமும் இல்லை.

சென்னை குடிநீர் பிரச்சனைக்காகக் கொண்டு வரப்பட்ட தெலுங்கு கங்கைத் திட்டம், வீராணம் போன்ற திட்டங்கள்அரசியலில் சிக்கி சின்னாபின்னாவிட்டன.

இந் நிலையில் இந்த ஆண்டும் சென்னையில் குடிநீர்ப் பஞ்சம் தொடங்கிவிட்டது. நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில்தண்ணீர் இருப்பு மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால், நகரில் இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள்விட்டுத் தான்குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது. வரும்சனிக்கிழமை முதல் (18ம் தேதி) இது அமலுக்கு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தமுறை கோடையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று அரசு அறிவித்தது. ஏன் அப்படிவீராப்பாக தமிழக அரசு பேசியது என்று இன்று வரை புரியவில்லை. இப்போது ஏரிகளில் இருக்கும் நீரை வைத்து வரும் ஏப்ரல்வரைதான் சென்னைக்குக் குடிநீர் வழங்க முடியும்.

குடிநீர் குழாய் வசதி இல்லாத பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்குடிநீர் வடிகால் வாரியத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த அளவுக்கு வடகிழக்குப் பருவமழை பெய்யாததால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகஅதிகாரிகள் கூறுகின்றனர்.

வரும் ஜூலை மாதத்திற்குப் பின் பெய்யும் தென் மேற்குப் பருவமழையின் அளவைப் பொறுத்தே கிருஷ்ணாவில்சென்னைக்கு நீர் திறந்துவிடப்படும் என்று ஆந்திர அரசும் கைவிரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+