""மதானியை விடுவிக்காவிட்டால்..."": அல் உம்மா வெடிகுண்டு மிரட்டல்!
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள மதானியை விடுவிக்காவிட்டால் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடுமாவட்டங்களில் உள்ள கோர்ட்டுகள், கிளைச் சிறைகளை குண்டு வைத்துத் தகர்ப்போம் என அல் உம்மாதீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் செல்லமுத்து, போலீஸ் எஸ்.பி. சங்கர் ஆகியோருக்கு இரண்டுநாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில்,
கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரான மதானியைஉடனடியாக விடுவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், ஜனவரி 18 மற்றும் 19 ஆகியதேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் செஷன்ஸ்கோர்ட், கூடலூர், குன்னூர், கோத்தகிரியில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கள் மற்றும் கிளைச் சிறைகளைஎங்களது தற்கொலைப் படையினர் குண்டு வைத்துத் தகர்ப்பார்கள் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைகள்ஆகியவற்றையும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக அல் உம்மா தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சிறைகள் மற்றும் கோர்ட்டுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications