வெடிகுண்டு புரளியால் நடு வழியில் நின்ற ரயில்
பெருந்துறை:
ஹைதராபாத்திலிருந்து எர்ணாகுளத்திற்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, அந்த ரயில் பெருந்துறை அருகே உள்ள மீஞ்சூர் ரயில் நிலையத்தில்நிறுத்தப்பட்டு, சோதனையிடப்பட்டது.
ஆந்திராவின் ஹைதராபாத்திலிருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு இன்று காலை ஒரு ரயில் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் காலை சுமார் 8 மணிக்கு தருமபுரி ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஒரு மர்மதொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசியவன், ஹைதராபாத்-எர்ணாகுளம் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் எந்த நேரத்திலும்அது வெடிக்கலாம் என்றும் கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.
இதையடுத்து தருமபுரி ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். அப்போது அந்தரயில் பெருந்துறை அருகே வந்து கொண்டிருந்தது.
உடனே மீஞ்சூர் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதற்குள் வெடிகுண்டு நிபுணர்களுடன் மீஞ்சூர்ரயில் நிலையத்தை அடைந்த போலீசார், பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு ரயில் முழுவதும் சோதனைநடத்தினர்.
ஆனால் ரயில் முழுவதும் தேடியும் எந்த ஒரு வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து குண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இதையடுத்தே பயணிகள் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டனர். இதைத் தொடர்ந்து காலை 11.45 மணிக்கு அந்தரயில் மீண்டும் கிளம்பி எர்ணாகுளம் நோக்கிச் சென்றது.
இந்த வெடிகுண்டு புரளியால் அந்த ரயில் பாதையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications