மீனவர்கள் தகராறு: பால்கனி இடிந்து விழுந்து ஒருவர் சாவு
சென்னை:
மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பால்கனி இடிந்து விழுந்து விழுந்ததில் ஆறுமுகம் என்ற மீனவர்பலியானார்.
சென்னையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் வசிக்கும் பகுதி. இங்குஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசித்து வருகின்றன.
இங்கு வசித்து வந்தவர் ஆறுமுகம். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடினார்.
இரவில் ஆறுமுகத்திற்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போதுஇரண்டாவது மாடியில் வசித்து வந்த ஆறுமுகம் தனது மகன்கள், மருமகன்களோடு, பால்கனிக்கு வந்து நின்று கீழேபார்த்து சண்டை போட்டார்.
அப்போது ஏற்கனவே விரிசலுடன் இருந்த பால்கனி திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் கீழே விழுந்த ஆறுமுகம்உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் ஆறுமுகம் இறந்தார்.அவருடைய மகன் கதிர், மருமகன்கள் ரவி மற்றும் முருகன் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரிய வீடுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் இருப்பதால்தான் இதுபோன்றசம்பவங்கள் ஏற்படுகின்றன என்று அப்பகுதி மீனவர்கள் கூறினர். உடனடியாக வீடுகளைப் பழுது பார்க்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications