இன்று அலங்காநல்லூர் ஜல்லிகட்டு: பாலமேடு ஜல்லிக்கட்டில் 186 பேர் காயம்
மதுரை:
மதுரை அருகே உள்ள பாலமேடு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுகள் முட்டியதில் 186 பேர்காயமடைந்தனர்.
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழகம் முழுவதிலும் நடந்துகொண்டிருக்கின்றன.
ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு கிராமத்தில் நேற்றுஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட காளை மாடுகள் கலந்து கொண்டன.
காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்ட 186 பேர் காயமடைந்தனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள்படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அலங்காநல்லூரில் இன்று...
இந்நிலையில் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த நிகழ்ச்சிக்குவிரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்துள்ளனர்.
மாடுகளை அடக்க வருபவர்கள் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியைக் காண வருபவர்களும் காயமடையும் ஆபத்துஉள்ளதால், இம்முறை ஏராளமான தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க மதுரையில்குழுமியுள்ளனர்.
வேலூரில் மஞ்சு விரட்டுக்கு தடை:
இதற்கிடையே, மஞ்சு விரட்டு எனப்படும் காளை விரட்டு நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்டத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மாட்டுப் பொங்கல் தினத்தன்று கிராமங்களில் காளை மாடுகளை அலங்கரித்து ஓட விடுவது வழக்கம். இதனால்ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதாக வேலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பிக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து கண்காணிப்பாளர் ராஜசேகரன், மஞ்சு விரட்டுக்குத் தடை விதித்தார். இதுதொடர்பாக அவர்விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
மாடுகளை விரட்டுகிறேன் என்ற பெயரில் பல சமூக விரோதிகள், சட்ட விரோதமான செயல்களில்ஈடுபடுகின்றனர்.
மேலும், காளை மாடுகளுக்கும் இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது, பொதுமக்களின் சொத்துக்களுக்கும்சேதம் ஏற்படுகிறது.
எனவே வேலூர் மாவட்டத்தில் மஞ்சு விரட்டு நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று எஸ்.பி. தெரிவித்திருந்தார்.
இதனால் வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சு விரட்டு நடக்கவில்லை. அதற்குப் பதில்ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications