கருணாநிதியை சமாதானப்படுத்த வாஜ்பாய் முயற்சி: அமைச்சரை அனுப்புகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாரதீய ஜனதாக் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உச்சகட்டத்தை அடைந்து வரும்நிலையில் கருணாநிதியை சாமாதானப்படுத்த மூத்த அமைச்சர் ஒருவரை வாஜ்பாய் இன்று சென்னைக்குஅனுப்புகிறார்.

வாஜ்பாய்க்கு மிக நெருக்கமானவரும், பிரதமர் அலுவலக விவகாரங்களை கவனித்து வரும் அமைச்சருமானவிஜய் கோயல் இனறு கருணாநிதியைச் சந்தித்துப் பேச உள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு கருணாநிதி அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நாள் முதல் பா.ஜ.க.வுக்கும்,திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடங்கி விட்டது.

ஜெயலலிதா அரசு மீது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற எண்ணம் திமுகதலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் மத்தியில் ஏற்பட்டது. அதை உறுதிசெய்யும் வகையில் திமுகவுடன்கூட்டணி வைத்துக் கொண்டே ஜெயலலிதாவுடன் பா.ஜ.க. நெருங்கியது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிமுக அரசை ஆதரித்துப் பேசுவதும், கருணாநிதிக்குப் பகிரங்க சவால்விடுவதாக செயல்படத் தொடங்கினர். இது திமுகவை எரிச்சல்படுத்தியது. இதையடுத்து மாநிலத்தில் திமுக, பா.ஜ.க.கூட்டணி கிடையாது என்றும் நட்பு மட்டும் நீடிக்கிறது என்றும் கருணாநிதி அறிவித்தார்.

அதே நேரத்தில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு ஆதரவையும் தந்தோடு அவர்களைக்கண்டிக்காமலும் அமைதியாக இருந்து வந்தார் கருணாநிதி. ஆனால், இப்போது நேரடியாக மத்திய அரசைத் தாக்கஆரம்பித்துள்ளார்.

மேலும் தன்னுடன் வைகோவையும் பா.ம.கவையும் சேர்த்துக் கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்துக்களைச்சொல்ல ஆரம்பித்துள்ளார். குறிப்பாக பா.ஜ.க. அரசின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான தனியார்மயமாக்கலையேஎதிர்க்க ஆரம்பித்துள்ளதன் முலம் கூட்டணியை விட்டு வெளியே ரெடி என்பதை திமுக தெளிவாக்கிவிட்டது.

திமுக போனால் அதிமுக என்ற முடிவில் பா.ஜ.க. தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் உள்ளனர். குறிப்பாகபா.ஜ.கவின் ஒரிஜினல் முகங்களான ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் ஆகியவை அதிமுகவை தீவிரமாகஆதரிக்கின்றன. ஆனால், ஜெயலலிதா குறித்து வாஜ்பாய்க்கு அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லை. அத்வானிபோன்றவர்கள் வற்புறுத்துவதால் ஜெயலலிதாவுடன் வாஜ்பாய் நல்லுறவைப் பேணி வருகிறார்.

அதே நேரத்தில் திமுக, பா.ம.க., மதிமுக ஆகியவை ஒட்டுமொத்தமாக வெளியேறினால் கூட்டணியில்அதிருப்தியில் உள்ள பிற கூட்டணிக் கட்சிகளும் இதே ஸ்டைலைப் பின்பற்றி தங்களை மிரட்ட ஆரம்பிப்பார்கள்என்பதாலும், டான்சி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஜெயலலிதாவை கூட்டணியில் சேர்த்தால் அது பொதுவாழ்வில்சுத்தம் பேசும் பா.ஜ.க. குறித்து தவறான கருத்தை ஏற்படுத்தும் என்பதாலும் திமுகவை சமாதானப்படுத்தும்முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது.

எனவே, கருணாநிதியை சமரசப்படுத்தும் வகையில் பிரதமர் அலுவலக அமைச்சரான விஜய் கோயல் சென்னைவருகிறார். இன்று சென்னை வரும் அவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு கோரி அவர் வேண்டுகோள்விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கோயல் - கருணாநிதி சந்திப்பு எந்த அளவுக்கு தமிழக பா.ஜ.க.வுக்குப் பலன் கொடுக்கும் என்பதுதெரியவில்லை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+