சென்னையிலிருந்து 34 தமிழ் அகதிகள் இலங்கை திரும்பினர்
சென்னை:
சென்னை அருகே உள்ள முகாமில் தங்கியிருந்த இலங்கை தமிழ் அகதிகளில் 34 பேர் இன்று காலை விமானம்மூலம் கொழும்புவுக்குச் சென்றனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் நடந்த பயங்கரப் போர்களைத் தொடர்ந்து அங்கிருந்துஏராளமான தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலன தமிழ்அகதிகள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள்தான்.
இந்நிலையில் தற்போது புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகநடந்து வருவதால், தமிழகத்தில் உள்ள ஏராளமான அகதிகள் தங்கள் தாய் நாடு செல்ல விருப்பம்தெரிவித்துள்ளனர்.
சென்னை அருகே புழல் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கும் 11 குடும்பங்களைச் சேர்ந்த 34 தமிழ்அகதிகள் தாங்கள் நாடு திரும்ப விரும்புவதாகக் கூறினர்.
இதையடுத்து அவர்களை இலங்கைக்கு அனுப்பும் பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவுஅதிகாரிகள் ஈடுபட்டனர்.
அதன்படி இன்று காலை அந்த 34 தமிழ் அகதிகளும் இன்று காலை சென்னையிலிருந்து இலங்கை செல்லும்விமானம் மூலமாக கொழும்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை இலங்கை அரசு வரவேற்று, அவர்களுடைய சொந்த ஊர்களுக்கே அனுப்பி வைக்கும்.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மீண்டும் குடியேற்ற வைக்கும் நடவடிக்கைகள்ஏற்கனவே தொடங்கி சிறிது சிறிதாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் முஸ்லீம்கள்...
இதற்கிடையே யாழ்ப்பாண தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் மீண்டும் தங்கள்பகுதிகளுக்குத் திரும்ப புலிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு இலங்கையில் மீள்குடியேற்றம் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தின்போது, முஸ்லீம்கள் மீண்டும்யாழ்ப்பாணப் பகுதிகளில் குடியேறுவதற்கு புலிகள் ஒப்புக் கொண்டனர்.
சந்திரிகாவின் மிரட்டல்கள்:
இதற்கிடையே, மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக இலங்கையில் சுற்றுப் பயணம்மேற்கொண்டுள்ள ஜப்பானின் சிறப்புத் தூதரான யாசுஷி அகாஷியை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சந்திக்கமறுத்து விட்டார்.
நேற்று இருவரும் சந்திப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சந்திப்பை ரத்து செய்துவிட்டார் சந்திரிகா.முக்கியமான ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதால் சந்திப்பை ரத்து செய்து விட்டதாக சந்திரிகாதரப்பில் கூறப்பட்டது.
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியதிலிருந்தே, புலிகளை அந்நாட்டு பிரதமர் ரணில்விக்கிரமசிங்கே ஆதரித்து வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
புலிகளுக்கு ஏராளமான சலுகைகளைத் தேவையில்லாமல் ரணில் வழங்கி வருகிறார். இந்நிலை தொடர்ந்தால்,அவரை டிஸ்மிஸ் செய்து விடுவேன் என்று நேற்று முன்தினம்தான் சந்திரிகா கடுமையான எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜப்பானின் சிறப்புத் தூதரைச் சந்திக்க சந்திரிகா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும்சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களை அகாஷி நேற்று சந்தித்தார். இன்று ரணிலையும்அவர் சந்தித்துப் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications