கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

தமிழகத்துக்கு தினமும் 2,500 கன அடி நீரைத் திறந்துவிட ஆரம்பித்துள்ளது கர்நாடகம். கபினி அணையில் இருந்து இந் நீர்திறந்துவிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல்லின் மூன்றில் ஒரு பகுதியையாவது காப்பாற்ற வேண்டுமானால் தினமும் 4,500 கனஅடி நீரை கர்நாடகம் இரண்டு வாரத்துக்குத் திறந்துவிட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரியிருந்தார்.

ஆனால், 1,200 கன அடி நீர் மட்டுமே தர முடியும் அதையும் ஒரு வாரம் மட்டுமே தர முடியும் என கர்நாடகம் கூறியது.

இதையடுத்து மீண்டும் மத்திய அரசின் உதவியை தமிழகம் நாடியது. இதோ பேச்சு நடத்துகிறோம், ஆலோசனை நடத்துகிறோம்,உயர் மட்டக் கூட்டம் போடுகிறோம் என்று கூறியே கடந்த 5 நாட்களைக் கடத்தியது கர்நாடகம்.

ஆனால், உடனே நீரை விடுமாறு பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டதால் நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிடஆரம்பித்துள்ளது. தமிழகம் 4,500 கன அடி கேட்ட நிலையில் அதில் சுமார் பாதி அளவான 2,500 கன அடி நீரை கர்நாடகம்திறந்துவிட்டு வருகிறது.

இதை எத்தனை நாட்களுக்கு விடுவார்கள் என்று தெரியவில்லை.

இந் நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து விவசாயிகள் அணையை முற்றுகையிடலாம் என்றுஅஞ்சப்படுவதால் கபினி அணையைச் சுற்றிலும் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 20 பிளாட்டூன் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி திட்டமிட்டபடி நடந்து முடிந்துவிட்டது. இருந்தாலும் தமிழகத்துக்கு நீர் விடஅங்குள்ள இன வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிடுதைத் தடுப்பது குறித்து நாளை மறுதினம் (20ம் தேதி) கூடி ஆலோசனை நடத்த உள்ளதாகவிவசாய அமைப்புகள் கூறியுள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+