உணவு கேட்ட விவசாயிகள் மீது போலீஸ் தாக்குதல்
சென்னை:
திருவண்ணாமலையில் இலவச உணவு வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல் செய்த விவசாயிகளை போலீசார் தடியடிநடத்தி விரட்டினர்.
இச் சம்பவத்துக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு கொண்டு வந்த இலவச உணவுத் திட்டம் அரை குறையாக அமலாக்கப்பட்டு வருகிறது. பட்டினியால்வாடி வரும் எல்லா விவசாயிகளுக்கும் இலவச உணவு வழங்க முடியாது என்பதால் குறிப்பிட்டவர்களுக்கு அதற்கான கூப்பன்வழங்க அரசு உத்தரவிட்டுளளதாகத் தெரிகிறது.
பல இடங்களில் கூப்பன் வழங்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் கூட உணவு தரப்படவில்லை. இதனால் உணவு கேட்டுவந்து வெறுங்கையுடன் திரும்பும் விவசாயிகள் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான செய்திகள் நிறைய வர ஆரம்பித்துள்ளதால் சாலை மறியல்களை தடியடி நடத்திக் கலைக்குமாறு போலீசாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உணவு வழங்கப்படாததால் அதைத் தட்டிக் கேட்ட விவசாயிகளை போலீசார் விரட்டி விரட்டி தடிகளால்அடித்தனர். ஏற்கனவே பஞ்சம் பட்டினியில் உள்ள விவசாயிகள் அழுது புலம்பியபடி கலைந்து சென்றனர்.
இச் சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு அறிக்கையில்,
ஏழை விவசாயிகளுக்கு இலவச உணவு தருகிறோம் என்று கூறிக் கொண்டு ஒரு அரைகுறைத் திட்டத்தை தமிழக அரசுசெயல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
உணவு கேட்டு வருபவர்களில் பலருக்கும் உணவு தரப்படுவதில்லை. திருவண்ணாமலையில் உணவு தராததைத் தட்டிக் கேட்டவிவசாயிகளை போலீசாரை விட்டு அடித்து விரட்டியுள்ளது இந்த அரசு. இது எந்த வகையில் நியாயம் என்று கேட்டுள்ளார்.
இளங்கோவன்:
காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்திய மக்கள் கையில் தட்டைக் கொடுத்து அவர்களை உணவுக்காக வரிசையில் காத்திருக்கவைத்திருக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் ஆட்சியில் விவசாயி மட்டுமல்ல, நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எல்லோருமே பட்டினியில் தான்உள்ளனர்.
ஆனால், இந்த உண்மைகள் மக்கள் மத்தியில் மறக்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மதம் தொடர்பானவிஷயஙகளை, சட்டங்களைக் கொண்டு வந்த அனைவரது கவனத்தையும் திசை திருப்பிக்கொண்டுள்ளார் ஜெயலலிதாவும்அவரை ஆதரித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசும்.
இந்த கேடுகெட்ட மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து வரும் 21ம் தேதி காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாடம்நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் கூப்பன்:
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச மதிய உணவு பெற விரும்பும் விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் அதற்கானகூப்பன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல் நடக்க இருப்பதால் இலவச உணவுத் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன்அனுமதி தரவில்லை. தமிழகம் விளக்கம் தந்த பின்னர் தான் அனுமதி தரப்பட்டது.
இதனால் இங்கு தாமதமாகத் தான் இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications