பழனியில் இன்று தேரோட்டம்
பழனி:
தமிழகத்தின் மிக முக்கிய திருத் தலங்களில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் தைப் பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது.
பழனி கோவிலின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசத் திருவிழா. கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கிய தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி தேரோட்டமாகும்.
முன்னதாக காலையில் சண்முக நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
தைப்பூசத்தையோட்டி லட்சகணக்கான பக்தர்கள் பால், பன்னீர், புஷ்பக் காவடிகளுடன் முருகனை வழிபட்டுதங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கா பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில்இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
தேரோட்டத்தைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதையொட்டி பழனியில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
150 கோவில்களில் குடமுழுக்கு:
இதற்கிடையே, தமிழகத்தில் மொத்தம் 250 கோவில்களில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதில் திருப்பணிகள்முடிவடைந்த 150 கோவில்களுக்கு அடுத்த வாரம் குடமுழுக்கு விழா நடக்க உள்ளது.
இத் தகவலை மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்உள்ள 250 கோவில்களில் திருப்பணிகள் முழு மூச்சில் நடந்து வருகின்றன.
இவற்றில் 150 கோவில்களில் அடுத்த வாரம் பணிகள் முடிந்துவிடும். உடனே இக் கோவில்களில் குடமுழுக்கும்நடைபெறவுள்ளது.
முதலமைச்சரின் கோவில் அன்னதானத் திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 144ஆலயங்களில் இந்த திட்டம் நடைறையில் உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த நிதிப் பற்றாக்குறை ஏதும்ஏற்படவில்லை.
ஒருவேளை ஏற்பட்டால் ரூ. 25 கோடியை தொகுப்பு நிதியாக உருவாக்கி அதன் மூலம் கிடைக்கும் வட்டியைவைத்து திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.
பழனி முருகன் கோவிலில் ரூ. 4 கோடியில் கேபிள் கார் அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்றார்அமைச்சர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications