மெரீனாவின் அலைகளையே மெளனமாக்கிய மக்கள் கூட்டம்
சென்னை:
பொங்கல் விழாவின் இறுதி நிகழ்ச்சியான காணும் பொங்கல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
காணும் பொங்கல் தமிழகத்தில் பரவலாக கொண்டாடப்பட்டாலும், சென்னையில்தான் மிக விமரிசையாககொண்டாடப்படுகிறது. பிற ஊர்களில் கோவில்களுக்கு செல்வது, தியேட்டர்களுக்கு செல்வதுடன் காணும்பொங்கல் நிறைவடைகிறது.
ஆனால், சென்னையைப் பொருத்தவரை கடற்கரைக்கு காலையிலேயே மூட்டை முடிச்சுகள், கட்டுச் சாதத்துடன்மக்கள் படையெடுப்பது வழக்கம். மாலையில்தான் அவர்கள் வீடு திரும்புவார்கள்.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை காணும் பொங்கலை மக்கள் விமரிசையாக கொண்டாடினார்கள். மெரீனாகடற்கரை, எலியர்ட்ஸ் பீச், சாந்தோம் பீச், மகாபலிபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர்கள் பூங்காஎன அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் மக்களால் நிரம்பி வழிந்தன.
குறிப்பாக கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள் தான் காணப்பட்டது. கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள்கடற்கரையில் குவிந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
மக்களின் ஆரவாரத்தால் கடல் அலைகளின் சத்தம் கூட அடங்கிப் போனது என்று சொல்லலாம்.
கூட்டம் அதிகம் இருந்ததால் போலீசாரும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் நடந்துவிடாமல்தடுக்க கடலில் குளிக்கவும் போலீசார் தடை விதித்தனர்.
ஆனால், போலீஸாரின் தடையையும் மீறி பலரும் கடலில் மூழ்கி எழுந்தனர் பலர்.
லட்சக்கணக்கில் திரண்ட மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர்வானில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது. அதேபோல, கடலுக்குள் யாராவது சென்று விட்டால் அவர்களைமீட்பதற்கு ஒரு கடலோரக் காவல் படை குழுவும் சுற்றிக்கொண்டே இருந்தது.
எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் காணும் பொங்கல் அமைதியாக முடிந்தது. கடுமையான போலீஸ்பந்தோபஸ்து காரணமாக வழக்கமாக காணப்படும் ஈவ் டீசிங், கலாட்டா போன்றவை இந்தமுறைகாணப்படவில்லை.
இளைஞர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக உற்சாக "மப்பில்" திரிந்து கொண்டிருந்தனர். ஆனால், காக்கிச் சட்டைகள்அதிகம் இருந்ததால் பெண்களிடம் இவர்களது தங்களது சேட்டையைக் காட்டவில்லை. வாலை சுருட்டிக் கொண்டுகடற்கரையை சுற்றிச் சுற்றி வந்தனர்.
காணும் பொங்கல் சென்னையில் வருடாவருடம் அதிக முக்கியத்துவம் பெற்று வருவதால் இம் முறை இதைக் காணபல ஊர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications