சாத்தான்குளம்: காங். தனித்துப் போட்டி: 24,000 சிறுபான்மையினர் பெயர்கள் மாயம்
ராமநாதபுரம்:
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்அறிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இத் தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம். எங்களை ஆதரிக்க மதசார்பற்ற கட்சிகள் முன் வந்துள்ளன. காங்கிரஸ் சார்பில்போட்டியிட் விரும்புபவர்கள் கட்சித் தலைமையகத்தில் ரூ. 5,000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெறலாம்.
வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார்.
சாத்தான்குளத்தில் திமுகவுடன் இணைந்து போட்டியிட கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் தீவிரமாக முயன்று வந்தார்.ஆனால், திமுக தரப்பில் இருந்து எந்தவிதமான குரலும் இல்லாததால் தனித்துப் போட்யிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மேலும் திமுகவுடனான கூட்டணியை இப்போதைக்கு முறித்துக் கொள்ள பா.ஜ.க. தயாராக இல்லை என்பதை மாநில காங்கிரஸ்தலைவர்களிடம் டெல்லி காங்கிரஸ் தலைமை விளக்கிவிட்டது.
இதனால் தனித்துப் போட்டியிடுமாறு உத்தரவிட்டுவிட்டது. தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டு திமுகவும் ஆதரித்தால்வரவேற்போம் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இதற்கு கருணாநிதி பதிலடி தந்துள்ளார். வலியப் போய் ஆதரிக்க வேண்டியஅவசியம் திமுகவுக்கு இல்லை என அவர் இன்று கூறிவிட்டார்.
பா.ஜ.க.:
சாத்தான்குளத்தில் தனித்துப் போட்டியிட பா.ஜ.கவும் முடிவு செய்துள்ளது. இன்று திருச்சியில் தொடங்கிய நடக்கும் அக் கட்சியின்4 பயிற்சி முகாமில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் கட்சியின் தேர்தல் குழுவும் இது குறித்து திருச்சியில் விவாதிக்கஉள்ளது. இன்று இரவுக்குள் தனது நிலையை பா.ஜ.க. தெளிவாக்கிவிடும் என்று தெரிகிறது.
திமுக:
அதிமுக தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்ட நிலையில், இப்போது தனது நிலையை தெளிவாக்காத ஒரே கட்சி திமுக தான்.வரும் 20ம் தேதி சென்னையில் கூடும் திமுக செயற்குழுவில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது.
காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை கருணாநிதி இன்று தெளிவாக்கிவிட்டதால் தனித்தே அக் கட்சி போட்டியிடும் என்றுதெரிகிறது.
திமுகவுக்கு பா.ம.க. ஏற்கனவே ஆதரவு தெரிவித்துவிட்டது. அதே போல மதிமுகவும் இங்கு திமுகவை ஆதரிக்கலாம் என்றுகூறப்படுகிறது.
திமுக இன்னும் தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவை ஆதரிக்காது. அவைகாஙகிரசையே ஆதரிக்க உள்ளன.
24,000 பெயர்கள் மிஸ்ஸிங்:
இதற்கிடையே சாத்தான்குளத்தில் வசிக்கும் கிருஸ்தவ மற்றும் முஸ்லீம் வேட்பாளர்கள் 24,000 பேரின் பெயர்களும் வாக்காளர்பட்டியலில் இருந்து மாயமாகி உள்ளது.
மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்ததால் இந்த சமூகத்தினரின் வாக்குகள் தனக்கு கிடைக்காது என்று அஞ்சி அவர்களதுபெயர்களை அதிமுக அரசு திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
அரசு அதிகாரிகளையும், போலீசாரையும் கொண்டு அதிமுகவினர் இந்த வேலையைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications